f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, February 2, 2013

Posted by Unknown
No comments | 6:42 AM


இஸ்லாமிய அமைப்பினர்: "விஸ்வரூபம் துவக்கக் காட்சியில் 'இது உண்மைத் தொகுப்பு' என்று இருந்தது. அதை மாற்றக் கோரினோம். அதன்படி 'இப்படம் முழுக்க முழுக்க கற்பனையே" என்று பதிவு செய்ய கமல்ஹாசன் ஒப்புதல். படத்தில் 15 காட்சிகள் நீக்கக் கோரினோம்; அதில் 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டோம். எங்கள் போராட்டங்களை வாபஸ் பெறுகிறோம்."

கமல்ஹாசன்: இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர், உள்துறைச் செயலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

இஸ்லாமிய சகோதரர்களுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

இஸ்லாமிய சகோதரர்கள் கேட்டுக்கொண்ட சில காட்சிகளின் ஒலியை நீக்குகிறேன்.

எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ரிட் மனு வாபஸ் பெறுகிறோம்.

விஸ்வரூபம் மீதான தடையை அரசு நீக்கும் என்று நம்புகிறேன்.

விஸ்வருபம் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பேன் என்று என் ரசிகர்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.
Posted by Unknown
No comments | 6:34 AM


விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

- அட கடவுளே (oh my god)
Posted by Unknown
No comments | 6:21 AM
முத்து லட்சுமிக்கு உள்ள உரிமைகூட
முஸ்லிம் சமுதாயத்துக்கு இல்லையா?

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை
அடிப்படையாகக் கொண்டு
‘வனயுத்தம்’ எனும் திரைப்படம்
தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்குத்
தடை விதிக்கக் கோரி
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி
சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த
சிவில் நீதிமன்றம்
படத்துக்குத் தடை விதித்தது.

இந்தத் தடையை ரத்து செய்யக்கோரி
படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ்
உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பு மூத்த வழக்குரைஞர்
ஏ. நடராஜன், சர்ச்சைக்குரிய
சில காட்சிகளை நீக்கி விடுவதாக
உறுதிமொழி அளித்தார்.
இதையடுத்து அந்தப் படத்தைத்
திரையிட
அனுமதி அளித்து
நீதிபதி உத்தரவிட்டார்.

இது இன்று (2.2.13) நாளிதழ்களில் வெளிவந்த செய்தி.

·கருத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம்
என்று கத்திக்கொண்டு
கமலுக்கு ஆதரவாகக்
களத்தில் இறங்கிய
வீராதி வீரர்கள் எல்லாம்
ஏன் இயக்குநர் ரமேஷûக்கு
ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை?

·தனிப்பட்ட முத்து லட்சுமிக்கு
உள்ள உரிமைகூட
ஒட்டுமொத்த
முஸ்லிம் சமுதாயத்துக்கு இல்லை
என்று ‘கருத்துச் சுதந்திர வீரர்கள்’
கருதுகிறார்களா?

·இரட்டை வேடமும்
இரட்டை நாக்கும் உள்ளவர்கள்
எப்போதுதான் திருந்துவார்களோ?

-சிராஜுல்ஹஸன்
Posted by Unknown
No comments | 5:43 AM
விஸ்வரூபம் விவகாரம் : முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு
பதிவு செய்த நாள் - பெப்ரவரி 02, 2013 at 6:38:39 PM
விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது குறித்து சற்று நேரத்தில் வெளியாகும்.......