f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Wednesday, January 30, 2013

Posted by Unknown
No comments | 1:25 AM


by Azeez Luthfullah on Monday, January 28, 2013 at 3:46pm ·
பி. ஜெய்னுலாப்தீன் தமிழகத்தின் மிகப்பெரும் பேச்சாளர். தன்னுடைய பேச்சால் பெரும் மக்கள் கூட்டத்தை வசியம் செய்து வைத்திருப்பவர். ஆயிரக்கணக்கான தொண்டர்களை உருவாக்கி வைத்திருப்பவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அவருடைய ஒரே ஒரு சொற்பொழிவைக் கூடக் கேட்டதில்லை, அல்லாஹ்வின் தனிப்பெருங்கிருபையால்.
அவருடைய பெயரை முதன்முதலாகக் கேட்ட நாளும் நேரமும் எனக்கும் இன்றும் நன்றாய் நினைவில் நிற்கின்றது. அபூபக்கர் சித்தீக் வாயில்தான் அவருடைய பெயரை முதன்முதலாய்க் கேட்டேன். ஆனால் அதென்னவோ அவருடைய எழுத்து, பேச்சு, பத்திரிகை, இயக்கம் எதுவுமே என்னைக் கவர்ந்ததில்லை.

வாழ்க்கையில் முதல் தடவையாக அவருடைய முழு உரையையும் இன்றுதான் கேட்டேன். அல்லாஹ் எனக்கு எங்கிருந்துதான் அந்த அளவுக்குப் பொறுமையைக் கொடுத்தானோ தெரியவில்லை. விஷ்வரூபம் படம் தொடர்பாக அவர் நேற்று ஆற்றிய உரைதான் அது. ஆஹா..! என்ன ஓர் உரை. அவர் சொல்கின்ற வாதங்கள் எல்லாமே அப்படியே நச்.. நச்..என்று பதிகின்றன. ஒவ்வொரு குறிப்புக்கும் என்னமாய் ஆதாரங்களைப் பட்டியலிடுகின்றார்..! முழுமையான தயாரிப்புடன் வந்தவராகத் தான் தெரிந்தார். கருத்துசுதந்திரம் பற்றி வக்காலத்து வாங்குகின்றவர்களின் வாதங்களை என்னமாய் நொறுக்கியடிக்கின்றார் தெரியுமா? ஒரு நடிகையின் கதை பற்றிச் சொல்கின்றார். டாவின்சி கோடு குறித்துச் சொல்கின்றார். தினகரன் சர்வேயினால் இரண்டு பேர் பலியானதைச் சொல்கின்றார். குற்றப்பத்திரிகை, டேம் 999 என ஒரு வலம் வந்துவிடுகின்றார். சிவாஜி கணேசனின் பராசக்தி தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்ததாம். அது எனக்கு புதிய செய்தி..


என்றாலும்... பொறுங்கள்.. அவர் பேசுகின்ற தொனியைத்தான் என்னால் செரித்துக் கொள்ளவே முடியவில்øலை. அவர் ஆளுகின்ற சில சொற்கள் என்னை அதிரச் செய்துவிட்டன. என் மனத்தை நோகடித்துவிட்டன. அவருடைய பேசுகின்ற தொனியில் தொக்கி நின்ற வன்மம்... பயங்கரம்.  கெட்ட வார்த்தைகளும் வசவுச் சொற்களும் நாம் கனவிலும் பேசத் தயங்குகின்ற சொற்கள் - ரொம்பவும் சரளமாய்ப் பயன்படுத்துகின்றார்.

இந்த நிமிடம் வரை என்னால் அதன் பாதிப்பிலிருந்து வெளி வர இயலவில்லை. இந்த மாதிரியான சொற்பொழிவை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. எடுத்துக்காட்டாக சில முத்துக்கள் :மானங்கெட்டவன், கபோதி, நாய், சினிமாக்காரன், வாடா, போடா, சண்டியடிச்சுப் போட்டாங்களா? இரண்டு பொம்பளைங்க.. காங்கிரஸ் கயவர்கள், புத்தி கெட்டு அலையுறே..!  பெண்ணுரிமை பேசுகின்ற நாய்களா? கூ முட்டை

ஏன் இந்தக் கொலைவெறி..!   வெறுப்பும் காழ்ப்புணர்வும் ததும்பத்தான் சொல்ல வேண்டுமா? சொல்வதை ஆணித்தரமாக அழுத்தம்திருத்தமாகச் சொல்ல வேண்டியதுதான். நாகரிகமாகவும் நயமாகவும் சொல்ல வேண்டாமா? நம் தரப்பு வாதத்தை இதமாக, மென்மையாக, இதயத்தைத் தொடுகின்ற முறையில் சொல்லவே முடியாதா? இந்தக் கேரக்டரை இதுவரை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோமே என்கிற வருத்தம் ஏற்படுகின்றது. பயமாகவும் இருக்கின்றது.

0 comments:

Post a Comment