ஞாயிறு, 27 ஜனவரி 2013
விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களைத் தவறாகச் சித்திரிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தனவென்று முஸ்லிம் அமைப்புகள் முறையிட்டிருந்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் படத்தைத் திரையிட தமிழக அரசு தடை விதித்ததும், தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுவருவதும் அறிந்ததே. இந்நிலையில், முஸ்லிம்களைத் தவறாகச் சித்திரிக்கும் காட்சிகளை மாற்றிவிட கமலஹாசன் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை எதிர்த்து கமலஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச்செய்துள்ள நிலையில், அப்படத்தை நீதிபதி கே.வெங்கட்ராமன் நேற்று பார்வையிட்டார். நாளை தனது தீர்ப்பை அறிவிக்க உள்ள நிலையில், தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இல்லாத பட்சத்தில், உச்சநீதிமன்றம் செல்லவும் முஸ்லிம் அமைப்புகள் ஆயத்தமாக உள்ளன என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, முஸ்லிம் அமைப்புகள் ஆட்சேபிக்கும் காட்சிகளை மட்டும் நீக்கி விட கமல்ஹாசன் சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் வெளீயாகியுள்ளது. இதுகுறித்து நாளை நீதிமன்றத்தில் முறைப்படி கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது உறுதிப்படுத்தப்படாத செய்தியே.
முஸ்லிம்களின் ஆட்சேபணைக்க்காளான காட்சிகளை நீக்க கமல்ஹாசன் முன்வரும் பட்சத்தில் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்று கூறப்படுகிறது.
www.inneram.com
0 comments:
Post a Comment