f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:40 AM


ஞாயிறு, 27 ஜனவரி 2013 


சிமோகா: கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் விஸ்வரூபம் திரையிடப்படுவது சம்பந்தமாக இருதரப்பாரிடையே எழுந்த மோதலால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் தடை செய்வதற்காக அந்தந்த மாநிலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் முழுவதுமாக தடை செய்யப்பட்டுவிட்டது.

கேரள மாநிலத்தில் சில திரையரங்குகளில் படம் வெளியான நிலையில், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி அதற்கு எதிராக நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து சில திரையரங்குகளில் படம் வெளியிடுவது நிறுத்திவைக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில், படத்தினை வெளியிட வேண்டுமென பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அங்குப் படம் வெளியானது.

இந்நிலையில், கர்நாடகாவிலும் சுமார் 40 திரையரங்குகளில் படம் வெளியிட தயாரானது. ஆனால் பல இடங்களில் அதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து சில திரையரங்குகளில் படம் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. பெங்களூர் லால்பார்க் சாலையிலுள்ள ஊர்வசி திரையரங்கில் நேற்று இரண்டாவது நாளாக படம் திரையிட இருந்த தருணத்தில், காவல்துறை திடீரென வந்து படத்தினை நிறுத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து படம் நிறுத்தப்பட்டது.

பாலாஜி திரையரங்கில் படம் திரையிட இருந்த நேரத்தில் ஒரு கும்பல் திடீரென திரையங்கினுள் நுழைந்து அடித்து நொறுக்கியது. இதில் ப்ரொஜக்டர் சேதமானது.

சிமோகா மாவட்டம் பத்ராவதி அன்வர் காலனியிலுள்ள வாகிஷ் திரையரங்கில் நேற்று பிற்பகல் 2 மணிக்குப் படம் திரையிடப்பட இருந்தது. அப்போது ஒரு பிரிவினர் வந்து படத்தினைத் திரையிடக் கூடாது என்ற பிரச்சனை செய்தனர். டிக்கட் வாங்கி வரிசையில் காத்திருந்தவர்கள் படம் திரையிடக் கூறினர்.

இது வாக்குவாதமாக மாறி, பின்னர் இரு தரப்பினரிடையிலான மோதலாக வெடித்தது. தொடர்ந்து அப்பகுதியில் கல்விச்சு சம்பவங்கள் நடந்தன. திரையரங்கு தாக்கப்பட்டது. மோதல் பத்ராவதி பகுதி முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மோதல் மேலும் பரவாமல் பாதுகாப்புக்காக காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன

  www.inneram.com

0 comments:

Post a Comment