திரைப்படங்களில் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்தல் குறித்துச் சற்றுமுன் ஒரு இளம் ஊடகவியலாளர் என்னிடம் பேசினார். எப்போது இப்படியான நிலை தொடங்கியது எனக் கேட்டார்.
நீண்டகாலம் வரை தமிழ் சினிமாக்களில் முஸ்லிம்களை ரொம்பவும் நேசத்துடனும் உயர்வாகவும் சித்திரிக்கும் நிலைதான் இருந்து வந்தது. சிவாஜி படங்களில் 'பாவமன்னிப்பு', எம்.ஜி.ஆர் படங்களில் 'ராஜாதேசிங்கு', 'குடியிருந்த கோயில்' முதலியன உடனடியாக நினைவுக்கு வரும் படங்கள்.
திரைப்படங்களில் திராவிட இயக்கத்தினர் கோலோச்சிய காலம் இது என்பதை நாம் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. திராவிட இயக்கம் முஸ்லிம்களை நேச சக்தியாகவே பார்த்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தோடு உலகளவில் "இஸ்லாமிய பயங்கரவாதம்" கட்டமைக்கப்பட்டது. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கி ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு 'நேட்டோ' முதலான தனது கூட்டமைப்புகளையும் ஆதரவுகளையும் தக்கவைப்பதற்குக் "கம்யூனிச பயங்கரவாதத்திற்கு"ப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு எதிரி தேவைப்பட்டபோது கட்டமைக்கப்பட்டதுதான் இஸ்லாமியப் பயங்கரவாதம்.
கம்யூனிசக் கருத்தியலுக்கு ஏற்பட்ட பின்னடைவோடு உலகெங்கிலும் ஒரு பக்கம் மத, சாதி,இன அடிப்படையிலான இயக்கங்களும், இன்னொருபக்கம் நியோ பாசிசமும் அரைப் பாசிசமும் தலையெடுக்க நேர்ந்தது தற்செயலான ஒன்றல்ல. இந்தியாவிலும் இந்துத்துவப் பாசிசம் வீச்சுடன் மேலெழுந்தது. உலக மயப் பின்னணியில் பெரிய அளவில் வளர்ச்சியுற்ற மத்தியதரவர்க்கத்தின் மத்தியில் இந்துத்துவக் கருத்தியலுக்கு ஒரு இடமிருந்த்தது.
இத்தகைய பின்னணியில் தமிழ்த் திரைப்பட உலகில் மேலுக்கு வந்தவர்கள்தான் கமலஹாசன், பாலச்சந்தர், மணிரத்னம், விஜயகாந்த் முதலானோர்...
திரைப்படங்களில் முஸ்லிம்கள் எதிர்மறையாகச் சித்திரிக்கப்படும் நிலை உருவானதன் பின்னணியை இப்படித்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
நன்றி மார்க்ஸ்
0 comments:
Post a Comment