மலாலா மற்றும் ரிஸானா விவகாரத்துடன் விஸ்வரூப பிரச்னையை முடிச்சு போட்டு விவரம் கற்பிக்கும் வேiலையை முகநூல் இடுகைகளில் காண முடிந்தது. இவ்விரண்டு பிரச்னைகள் மட்டுமல்ல தலாக் விவாகரத்து முறை, திருமணம்,பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துக்கொள்ளத் தடை, பர்தா…… முதலியவற்றுடன் விஸ்வரூபத்தை எப்படி இணைத்துப் பேசுகின்றார்கள் என்றே தெரியவில்லை...? அவர்களுக்கு சில விளக்க நிலைகள், குறிப்பாக நண்பர் காசி தமிழ செல்வன் மற்றும் அனு ஹாசினி ஆகியோருக்கு:-
முதலில் பர்தா பற்றி.., உடலை வெளிச்சம் போட்டுக் காட்ட உரிமை உள்ளபோது.., அதனை மறைக்க மட்டும் ஏன் உரிமை இல்லை..?திருமணம்.., சட்டரீதியான ஒப்பந்தம் சரியா அல்லது உங்கள் விஸவரூப நாயகனைப் போல லிவிங் டுகெதர் சரியா.., இவை மட்டுமல்ல விவாகரத்து உள்ளிட்ட பல் அம்சங்களும் இஸ்லாமிய சட்ட விஷயங்களுடன் தொடர்புடையவை அவை குறித்து பேச வேண்டும் எனில் அதனை முற்றிலும் ஆய்ந்து பின்னர் விவாதத்துக்கு வர வேண்டும்..!மேற்போக்காக மட்டும் நிலைமைகளை சொல்லக்ககூடாது..!
எனவே சமீபத்திய இரண்டு முக்கிய நிகழ்வுகளான,சிறுமி மலாலா மற்றும் இலங்கை ரிஸானா ஆகிய இரண்டு நபர்கள் சார்ந்த விஷயங்களும் மட்டும் எடுத்துக் கொள்வோம். சிறுமி மலாலா மற்றும் இலங்கை ரிஸானா ஆகிய இரண்டு நபர்கள் சார்ந்த விஷயங்களு விஸ்வரூபம் பிரச்னையும் வெவ்வேறு தளங்களில் அலசப்பட வேண்டிய அம்சங்கள்..!மலாலாவுக்கு நேர்ந்த நிலை சரிதான் என்று யாராவது உண்மை முஸ்லிம்கள் சொல்லிருக்கின்றார்களா..?அடுத்து ரிஸானாவின் உண்மை நிலை,வழக்காடு மன்ற தளங்களில் அலசப்பட வேண்டியது.வளைகுடா நாடுகள் தொடர்புடைய விஷயம் என்பதால் இதனை சற்று விரிவாகக் கூறுகின்றேன்:-ரிஸானா விவகாரம் எந்த வகையில் அணுகப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு அம்சங்கள் முகநூலிலும் இன்னபிற ஊடகங்களிலும் விவரம் அறிந்தோர் மத்தியிலும் குறிப்பாக ரிஸானா சார்ந்த இலங்கை நாட்டிலும் பல கோணங்களில் அலசப்படுகின்றன.
இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது..? யார் குற்றவாளி..?
முதலில், இரு உயிர்கள் (ரிஸானா மற்றும் இறந்த ஸவூதி குழந்தை) பற்றிய இந்த பிரச்னையில் பல்வேறு அம்சங்கள் இருப்பினும் நான்கு அதிமுக்கிய கோணங்களில் இதைக் காணலாம்.ஒன்று: ரிஸானா குற்றவாளி,தண்டனை கிடைக்க வேண்டும்.இரண்டு:ரிஸானா நிரபராதி,சட்டம் குற்றவாளி,மூன்று:ரிஸானா குற்றவாளி,பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிக்கக் கூடாது.நான்கு:ரிஸானா குற்றவாளி அல்லது நிரபராதி, பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னித்திருக்கலாம்.
இதில் முதல் நிலைப்பாடு பாதிக்கப்பட்ட ஸவூதி குடும்பத்தினுடையது.இரண்டு, இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டிருக்கும் நவீனத்துவ முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத சில மக்களின் நிலைப்பாடு. மூன்றாவதை யாருமே சொல்லக்கூடியவர்கள் அல்லர், பாதிக்கப்பட்ட அந்த குடுமபத்தின(ர்களில் ஒரு சில)ர் தவிர! நான்காவதாவது நடந்திருக்காலாமே என்பது ஒட்டுமொத்த மக்களின் நினைப்பாக இருந்தது, பாதிக்கப்பட்ட அந்த குடுமபத்தின(ர்களில் ஒரு சில)ர் தவிர!
இனி விஷயத்துக்கு வருவோம்!இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி தண்டணை தரப்பட்டிருப்பின் அதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. உண்மையில் ரிஸானா குற்றவாளியா இல்லையா என்பதை ஆராய இந்த தலையங்கம் வரையப்படவில்லை.அதெல்லாம் நீதிமன்ற வழக்காடு முறைமைகளில் அலசப்பட வேண்டிய விஷயங்கள்! குற்றங்கள் அவைகளின் நடைமுறை சார்ந்த தளங்களில்தான் அணுகப்பட வேண்டுமே அன்றி பால்,நாடு சார்ந்த அம்சங்களில் அல்ல..!
எனவே,இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை காட்டுமிராண்டித்தனமானதாகவும், அதனைப் பின்பற்றுவதில் குறைந்தபட்சமாவது திகழும் ஸவூதி அரேபியா மற்றும் மன்னர் குடும்பத்தையும் குற்றவாளிகளாக விமர்சிப்பது எந்த அடிப்படையில் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
சட்டம் செய்த கடமையை உணர்ந்திருப்பதால்தான், பொருளாதாரத்தால் ஏழ்மையில் இருக்கும் ரிஸானாவின் தாயார் 'என் பிள்ளையை அல்லாஹ்தான் கொடுத்தான்.அல்லாஹ்வே எடுத்துக்கிட்டான்.இஸலமிய ஷரீஅத் சட்டத்ததை நான் மதிக்கின்றேன்' என்று கூறி இறைநம்பிக்கையால் இணையில்லா செல்வந்தராக உயர்ந்துவிட்டார்.
ரிஸானா தவறிழைத்தாரா இல்லையா என்பது இருவருக்கு மட்டுமேதான் தெரியும்.ஒன்று சுயம் ரிஸானா.இரண்டாவது இதயங்களின் இரகசியங்களை அறிந்த அந்த ஏக இறைவன்!ரிஸானா போன்றோரின் மனஇரகசியத்தை குறைந்தபட்சம் உலகநீதிமன்ற நீதிபதிகள் அறிய முடியுமானால் பிரச்னையே இல்லையே.!ஆனால்,ஏகஇறைவனைத் தவிர மன இரகசியத்தை யார்தான் அறிய முடியும்..?
குற்றவாளியா., இல்லையா என்று ஆராய்வீர்களானால்.., குற்றவாளிப் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும்..!
இன்று ரிஸானாவின் ஏழ்மையை அவளுடைய இயலாமையுடன் முடிச்சு போட்டு அதனை அவிழ்க்க முடியாமல், இஸ்லாமிய சட்டங்களை கடப்பாரை போன்ற வன்மம் மிக்கதாகக் கூறுவோர், அதே ரிஸானா படிப்பில் கெட்டியாக இருந்தும், 9-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி குடும்பத்துக்காக விமானம் ஏறினாளே.., அப்போது எண்ணிப் பார்க்காதிருந்த அந்த 'அக்கறைவான்கள்' கொண்ட சமூகத்தினர் குற்றவாளிகளா..?
போலி சான்றிதழ் தந்து அவளின் ஏழ்மையை இன்று தூக்குக் கயிற்றுக்கு விலை பேசிவிட்ட முகவர்கள் குற்றவாளிகளா?
தனது ஊரில் வசிக்கும் ஒரு ஏழை முஸ்லிம் பருவப்பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிவிடும் வகையில் அவளைக் கவனிக்காதுவிட்ட சமூகம் குற்றவாளியா?
தனது குடும்பத்துக்காகவோ அல்லது சுய சம்பாத்தியத்துக்காகவோ இந்த நிலைக்கு ஆளாகிவிட்ட சுயம் அந்த ரிஸானாவே குற்றவாளியா? யார் குற்றவாளி??
தீர்ப்பு இறைமன்றத்தில் தீர்வாகும் வரை இன்று நாம் ஸவூதி சட்டங்களையோ அல்லது மன்னிக்காத அந்த குடும்பம் பற்றியோ அல்லது சுயம் ரிஸானாவையோ குற்றஞ்சாட்டி பயனில்லை.
ரிஸானாவின் விஷயத்துக்கு வருவோம்!
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு உண்மையில் ரிஸானா குற்றவாளி இல்லை என இருந்தால், அவளுக்குரிய சுவனப்பரிசை இறைவன்தான் நிர்ணயிக்க முடியும்.அது மறுமையில்தான் தீர்ப்பாகும்.
குறிப்பாக ஸவூதி மற்றும் இஸலாமிய சட்டங்களைக் குறை கூறுவோர் சற்று சிந்திக்கட்டும்..!ரிஸானாவைப் பலியிட வேண்டும் என்பது மட்டும் அவர்களின் நோக்கமாக இருப்பின், அவளைக் காப்பாற்ற சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்புக்காக தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்திருப்பார்களா..? 3 மில்லியன் ரியால்களும்,உடல்நலன் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தின் இன்னொரு குழந்தைக்கு வெளிநாட்டு சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்ள உதவுவதாக தனிப்பட்ட ரீதியில் தனவான்கள் சொல்லியிருப்பார்களா..?
ஸவூதி மன்னர் ஒரு கோரிக்கையாக ஈட்டுத்தொகை பெற்று,மன்னிக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தை கேட்டுக்கொண்டதும் இது திருட்டுக் குற்றம் அல்ல என்பதால்தான்..!தீர்ப்பை மாற்ற அவருக்கும் உரிமை இல்லை.ஏனென்றால், பாதிக்ப்பட்ட குடும்பம்தான் இறைவன் தந்த சட்டத்துக்குட்பட்டு மன்னிக்க தகுதியானவர்களே அன்றி ஆட்சியாளர்கள் அல்லர்.
மேலும்,தன்னிடம் திருட்டு விஷயத்தில் பரிந்துரைக்கு வந்த உயர்குலத்தாரிடம் அதுவும் தனது குறைஷ் குல மக்களிடம் 'எனது மகள் ஃபாத்திமாவேகூட திருடியிருந்தால் அவள் கையை வெட்டுவேன்' என்ற தானைத் தலைவனின் ஆளுமையில் பயின்ற மக்கள் நாம்.
அதேபோல் பல்வேறு உயிர் தொடர்பற்ற அம்சங்களிலேகூட சாட்சிகளின் பலம், ஆதாரங்களின் வலு இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு இஸ்லாமிய சட்டம் மிக நுட்பமாக நடைமுறைப்படத்தப்படும்போது, ரிஸானாவின் வழக்கு போன்ற உயிர் தொடர்பான விஷயங்கள் எனில், எத்துணை ஆழமாக நுட்பமாக வழக்கை நடத்தியிருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டாமா..?
ஸவூதியை முன்வைத்து இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களைக் குறை கூறுவோர், மற்றொன்றையும் இங்குக் கவனிக்க வேண்டும், இஸ்லாமிய அனுமதி வரையறைகளுக்குட்பட்டு தன்னால் இயன்ற வரை ஸவூதி அரேபியா ரிஸானாவைக் காப்பாற்ற முயன்றது.இதனை எவரும் மறுக்க முடியாது.அதனால்தான் 2007-இல் முடிவான பின்னரும் இத்தனை நாட்கள் வரை மன்னிப்பின் வாய்ப்புக்கு அவகாசம் ஏற்படுத்தித் தந்திருந்தது.
ஆனால், அனைத்துக்கும் மேலாக, இறைசட்டங்களின் அடிப்படையில் முடிவான ஒரு தீர்ப்பை மன்னிப்பால் மாற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத்தான் உரிமை உண்டே தவிர நாட்டு மன்னர்கூட ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் ஸவூதி நிரூபித்திருக்கின்றது.நமது நாடுகளில் நடப்பதுபோல், கருணை மனுவை ஜனாதிபதிகளுக்கு அனுப்பி இறைசட்டத்தை கேலிக்கூத்தாக்கும் அம்சம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் கடைப்பிடிக்க முடியாது..!
இந்த விஷயத்தில் ஒரே ஒரு சாரார் அதாவது, பழிக்குப் பழி எனும் உரிமையை இஸ்லாம் கொடுத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்ட பாதிக்கப்பட்ட ஸவூதி உதைபி குடும்பத்தார்,அதனைவிட சிறந்த மன்னிப்பின் மகிமையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால்,உலகத்தார் முன்னிலையிலும், மறுமையில் இறைசந்நிதானத்திலும் ஒரு உன்னத மதிப்பை எய்தியிருப்பர்.அந்த மகத்துவமிக்க வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்..!
ஆம்..!கருப்பு பர்தாவில் விழிகள் மட்டும் தெரிய தூக்குமேடைக்கு நடைபயின்ற கடைசி வரை 'என்னய எப்டியாவது நாட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கம்மா' என்று ஏங்கி;க் கொண்டிருந்த அந்த பருவப் பெண் குற்றவாளி இல்லை என்றால்,இறைநீதிமன்றத்தில் தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்காக பரிகாரமாய் இறைகொடையை வெல்வாள்.அதுவரை யார் குற்றவாளிகள் என் பரஸ்பர குற்றச்சாட்டுக்களில் வீழ்ந்திடாமல்,இனி இதுபோன்ற ரிஸானாக்களின் நிலைக்கு எந்தவொரு மனிதரும் காரணமாகி நிற்கக்கூடாது எனும் வகையில் தனிமனிதர் ஒவ்வொருவரும் பொதுநல நோக்கோடு சமூக தொலைநோக்கோடு செயற்படவேண்டும்.நம்மால் இப்போது செய்ய முடிவது எல்லாம்.., அவள் குற்றவாளி இல்லையெனில் அவளுககு இழைக்கப்பட்ட அநீதிக்காக இறைவா, மறுமையில் அவளு;க்கு உன்ன நீதியை வழங்குவாயாக..! என்றுதான் பிராரத்திக் முடியும்.உலகியல் ரீதியாக அவளது வருமானத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் அவள் குடும்பத்தாருக்கு இயன்ற உதவிகளை ஆற்றிட வேண்டும்.அதற்கும் மேலாக, அந்தந்த நாட்டு சட்ட ரீதியாக,பருவப் பெண்கள் பிழைப்புக்கு வழி தேடிச் செல்லும் வகையில் சட்டங்கள் முறைப்படுத்தப்படுவதில் கடும் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும்.
தீவிரவாதம் எந்த பெயர் தாங்கிக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்பது முஜ்லிம்களின் கடமை.அதனைத்தான் இந்திய முஸ்லிம் செய்திருக்கின்றார்கள்.அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை எந்த முஸ்லிம் அமைப்பாவது எதிர்த்து அறிக்கைவிட்டு அது சரியல்ல என்று வாதிட்டதா என்ன..?ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை கூடாது என்றுசட்டசபையில் தீர்மானம் இயற்றினோனே..!தணிக்கை குழு அனுமதி வழங்கிய பின்னரும் குற்றப்பத்திரிக்கை படத்தை தடை செய்தபோது,அதனை எதிர்த்து நிற்காமல் இருந்தது ஏன்..?அப்போது எங்கே போனது கலை சுதந்தரம்..?டாம்-கு ஒரு நீதி..?விஸ்வரூபத்துக்கு ஒரு நீதியா..?செயற்களத் தாக்குதல்களைவிட சிந்தனைத் தாக்குதல் என்பது மிகவும் அபாயகரமானது.அது எந்தவொரு மதத்தின் வாயிலாக வந்தாலும் வேரறுக்கப்பட வேண்டியது.இந்தித் திரையுலகம் பால் தாக்கரே-வுக்கு அப்பாற்பட்டு இயங்க முடியுமா..?அவருடைய மரணத்துக்கு மு;மமை அடைபட்டதை விமர்சித்தத கருத்துச் சுதந்தரத்துக்கு கைதைப் பரிசாகத் தந்நததே சமூகம்..!அப்போது எங்கே போனது நடுநிலைத் தன்மை..?எனவே, விஸ்வரூபத் தடை என்பது உணர்வுகளுக்கு - வணிகத்துக்கும் இடைப்பட்ட போராட்டம்.அங்கு உணர்வுகளுக்குத்தான் மதிப்பே அன்றி தனிப்பட்ட வணிகர்களின் கஜானா நிரப்புவதற்கு அல்ல..!
விஸ்வரூப விஷயத்துக்கு வருவோம்..!படத்தைப் போட்டுக் காட்டியது தவறு என்று எப்படி சொல்கின்றீர்..?வெளிவந்த பின்னர் நடவடிக்கை என்பது எந்த அளவுக்கு சாத்யமாகும்..?ஆட்கொல்லி எய்டஸ் நோய் வராமல் எச்சரிக்கையாக இருப்பது சரியயா..?வரட்டும் அதன் பின்னர் மருந்து சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம் எனன்பது சரியா..?புற்றுநோய்க்குக் காரணமான சாதாரண சிகரெட் விளம்பரங்களிவேயே முன்னெச்சரிக்கை என்று சொல்லி விளைவுகள் குறித்து எச்சரிக்கும் நாம்.., சமூக ஒற்றுமை எனும் அழகிய பூந்தோட்டத்தை வருணிக்கின்றேன் பேர்வழி எனும் போர்வையில் நாசப்பபடுத்துவதை எவ்வாற அனுமதிக்க முடியும்..?
ஒரு சில முஸ்லிம்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவறான வார்த்தைப் பிரயோகங்களை கையாளுவதுதான் வேதனை அளிக்கின்றது. அவ்வாறின்றி எதிர்ப்புக்களை நாகரிகமான முறையில் பதிவு செய்யுங்கள். ஏனெனில், தமது நாயகனாக முஸ்லிம் கருதும் முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி இறைவன் இவ்வாறு கூறுகின்றான்: (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள்.
ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான். (திருக் குர்ஆன் 3:159)ஆம்..! அவருடைய வழி வந்த நாம் அவருடைய ஆளுமைக் குணநலன்களிலிருந்து எம்மைப் பிறழச்செய்துவிடக்கூடாது..! மற்றபடி முஸ்லிம்களின் விஸ்வரூப எதிர்ப்பு எந்த வகையிலும் தவறு என ஒதுக்கிட முடியாது..!
-VASANTHAM TAMIL

0 comments:
Post a Comment