f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:29 AM
மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் நேற்று (26.01.2013) மதியம் 1 மணீயளவில் விஷ்வரூபம் படம் நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தை நடுநிலை உணர்வோடு பார்க்கச் சென்ற நான் அறிந்துகொண்டது என்னவேன்றால், இப்படமானது அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பு செயல் திட்டத்தின் ஒரு வடிவமாகவே நான் இதை பார்க்கின்றோம். ஏனேனில் அமெரிக்க தீவிரவாதிகள் உலகத்திற்கு எதை கற்பித்துக் கொண்டிருக்கிறார்களோ அதை நடிகர் கமலஹாசன் படமாக எடுத்துள்ளார். இப்படத்திலே இஸ்லாமியர்களின் கடமைகளான கலிமா, தொழுகை, மற்றும் இறைவேதமான திருக்குர் ஆன் வசனங்கள் இவை அனைத்தும் தீவிரவாதத்தின் தூண்டுகோலாக இருப்பதைப் போன்று படமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலாச்சார அடையாளங்கள் தீவிரவாதத்தின் அடையாளங்களாக படமெடுக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தானின் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் அமெரிக்காவை அழிப்பதற்காகவே உருவாக்கப்படுகின்றனர் என்ற கருத்தினை படமாக்கிய கமல் அவர்கள், ஆஃப்கானிஸ்தானின் மக்கள் ஏன் அமெரிக்காவிற்கு எதிராக போராட வேண்டும் என்ற உண்மையை வேண்டுமேன்றே மறைத்துள்ளார். இப்படத்தினை பார்வையிட்டது ஒரு அளவிற்கு இஸ்லாமிய உணர்வுகளை புரிந்து தீர்ப்பளிப்பதற்கு நீதியரசர் வெங்கட்ராமன் அவர்களுக்கு உதவும் என்று நான் நம்புகின்றேன்.
இந்தப் படத்தில் இஸ்லாத்திற்கு எதிராக நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆயினும் அதில் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. மதுரை, கோயம்பத்தூர் போன்ற ஊர்களில் வாழும் முஸ்லிம்கள் உலக பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதைப் போன்ற சித்தரிப்புகள்.

2. இஸ்லாமியர்களின் முதல் கடமையான கலிமாவை சொல்லி கொலை செய்வதைப் போன்ற காட்சிகள்.

3. ஒவ்வொரு குண்டு வெடிப்புகள் நடக்கும் முன்பு இஸ்லாமியர்களின் இரண்டாவது கடமையான தொழுகையை நிறைவேற்றி, துவா செய்துவிட்டு குண்டை வைப்பதைப் போன்ற காட்சிகள்.

4. இஸ்லாமிய சிறுவர்கள் ஆங்கிலம் படிப்பதையோ அல்லது மருத்துவம் போன்ற படிப்புகளை படிப்பதை விட துப்பாக்கி ஏந்திய ஜிஹாதிகளாக உருவாக்கப்படும் படி சித்தரிக்கப்பட்ட காட்சிகள்.

5. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அணிந்து பெண் வேடமிட்டு தற்கொலை தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள்.

6. ஒவ்வொரு குர் ஆன் ஆயத்தொடு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் காட்சிகள்.

7. இஸ்லாமியர்கள் ஏக இறைவை புகழும் வார்த்தைகள் அனைத்தும் தீவிரவாதத்தின் வார்த்தைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

8. இந்த படங்களின் காட்சிகள் அனைத்தும் ஆஃப்கானிஸ்தானில் வைத்து நடப்பது போன்று கூறி பிறகு தீவிரவாதிகள் இந்தியாவிற்கு வருவதைப் போன்றும், அதனை விஸ்வரூபன் பாகம் இரண்டில் காண்பிக்கப்படும் என படத்தை முடிவில்லாமல் முடித்துவிட்டார்.

0 comments:

Post a Comment