"சட்ட ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் கடமை. அதை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்தப் படம் 524 திரையரங்களில் திரையிட இருந்தது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இந்தப் படத்தை தடை செய்யக் கோரினர். அவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் படத்துக்கு அனுமதி அளித்திருந்தால் பெருமளவில் வன்முறை வெடித்திருக்கக் கூடும்.
உளவுத் துறை மூலம் கிடைத்தத் தகவல்படி, அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு உரிய போலீஸார் எண்ணிக்கை இல்லை.
ஒவ்வொரு திரையரங்குக்கும் தினமும் மூன்று வேளைக்கு தலா 60 போலீஸார் தேவை. ஆனால், அதற்கு உரிய எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடியாது.
மொத்த பாதுகாப்புக்கு 56,440 போலீஸார் தேவை. இது சாத்தியம் இல்லை. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்க வேண்டியதாகவிட்டது.
ஜெயா டிவிக்கு படத்தின் உரிமை தரப்படவில்லை என்பதால், இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதாக கூறும் புகார் முற்றிலும் தவறு. ஜெயா டிவிக்கும் எனக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அதில் எனது பங்குகள் எதுவும் இல்லை. அந்தச் சேனல், அதிகவை ஆதரிக்கிறது அவ்வளவுதான்.
கமல்ஹாசன் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு. அவர் எனக்கு எதிரானவர் அல்ல. வேட்டி கட்டியவர் பிரதமர் ஆக வேண்டும் என்று அவர் சொன்னதால் எனக்கு வெறுப்பு, பழைய பகை உள்ளது என்று சொல்வதெல்லாம் தேவையற்றது. அது அவரது தனிப்பட்ட கருத்து. பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடரப்படும்.
இஸ்லாமிய தலைவர்களுக்கும் கமலுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டால் தடை நீக்க நடவடிக்கை. இரு தரப்பும் பேச்சு நடத்தித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி பிரச்னை தீர்க்கப்பட்டால், அரசு உறுதுணையாக இருக்கும்."
0 comments:
Post a Comment