f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Wednesday, January 30, 2013

Posted by Unknown
No comments | 1:49 AM
இது  இறைவனுக்கு கீழ்படிந்தவர்களுக்கானது......

விஸ்வரூபம் திரைப்படம் இன்று வெளியாகும் என்று நீதிமன்றம்! தீர்ப்பு வழங்கியுள்ளது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.

1. டேம்999 படத்திற்கு மனம் புண்படும் என்பதால் தடை.....விஸ்வரூபத்திற்கு 100 கோடி ருபாய் செலவு என்பதால் தடை இல்லை.
2.பலகோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கியது இந்த அணுகுண்டு அதனை மக்கள் மீது போட்டால் தானே தெரியும் அதன் சக்தி என்பது போல் இருக்கிறது விஸ்வரூபம் படம் வெளிவந்தால் தான் அது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று அறிய முடியும் என்ற வாதம்.
3. இந்நாட்டின் பிரஜைகளின் கோரிக்கை என்ற அடிப்படையில் ஒரு சிறு காட்சியை கூட நீக்கி உத்தரவிடவில்லை என்பது பெருத்த ஏமாற்றம்.
4. தனிமனிதனுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் இந்நாட்டில் பல கோடிபேராக வாழும் முஸ்லிம்களுக்கு இல்லை.

ஆனால் தமிழக அரசு வழக்கறிஞர் படத்தை எதிர்த்து மீண்டும் மேல் முறையீடு செய்யும் என்பதால் படம் வெளியாகாது.

எனினும் படம் வெளியாகினாலும் முஸ்லிம்கள் அமைதிகாக்க வேண்டும். அமைதியும்,கட்டுப்பாடும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலைமைக்கு கீழ்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் இன்றியமையாத ஒரு விதி.....

எனவே 24 அமைப்புகளும் சேர்ந்து பிறப்பிக்கும் கட்டளைகளுக்கு கீழ்படிய வேண்டும்.... நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.... படத்திற்கான ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது அவசியம் அதேநேரம் தனிநபர் விமர்சனமோ, குரோதங்களை உருவாக்கும் கருத்துக்களோ தயவு செய்து வேண்டாம்......

வன்முறை என்பது கயவர்களின் ஆயுதம்..... அதனை விஸ்வரூபம் என்ற படம் மூலமாக முஸ்லிம்களிடத்தில் உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் சில சமூக விரோதிகள் எண்ணுவது உண்டு.
அதனை நாம் அடியோடு உடைக்க வேண்டும். நாம் அமைதியின் மார்க்கத்தில் இருந்து சரியான சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம் என்பதை மக்கள் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டும். இறைவன் வெற்றியை தருவான் பிரார்த்தனை எனும் ஆயுதத்தால் தொடர்ந்து வெற்றியை இறைவனிடம் கேளுங்கள்.

இப்படிக்கு.
சபீர் அஹ்மத்

0 comments:

Post a Comment