f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:13 AM

எங்கள் அன்பு இந்திய உடன் பிறப்புகளே ஏன் எங்களை ஓரம் தள்ளுகிறீர்கள் ?

ஏன் எங்கள் மனதின் கஷ்டத்தை அறிய மறுத்துக்கொண்டு உள்ளீர்கள் ?

நாங்கள் செய்யும் தவறுதான் என்ன?

ஏன் எங்களை அந்நிய படுத்துகிறீர்கள்?

கேவலம் ஒரு நூறு கோடி செலவில் ஆனா திரைபடத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதக்காகவா நூறு கோடி முஸ்லீம்களின் உணர்வை உடைத்து எறிகிறீர்கள் ???

உங்கள் மன நிலையயை கெடுத்து பணம் சேர்க்கும் ஒரு கூட்டத்துகாகவா உங்கள் கூடவே இருக்கும் நண்பனின் நம்பிக்கையை பொய் ஆக்க முயற்சி செய்கிறீர்கள் ???

உங்களுக்கு மார்க்க ரீதியான நேர்வழியை இறைவன் காட்டவேண்டும் என்று உங்களுக்காக தினமும் ப்ராத்தனை செய்யும். உங்களின் ரத்த உறவுகளையா நீங்கள் தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறீர்கள் ???

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொன்னால்தான் நீங்கள் தேசியவாதிகள் ஆகா முடியுமா ?

இல்லை என்றால் நாங்கள் எங்களின் மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்கின்றது என்று சொன்னால்தான் எங்களையும் தேசியவாதி என்று சொல்வீர்களா ???

எங்களிடம் நீங்கள் எதிர் பார்பதுதான் என்ன ???

திரையில் என் இனத்தை தீவிரவாதி என்று சொல்லும்போது நாங்களும் உங்களுடன் சேர்ந்து கை தட்டி விசில் அடிக்கவேண்டும் என்று ஆசை படுகிறீர்களா???

எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றாலும், தயவுசெய்து குரல் கொடுத்துக்கொண்டு இருக்கும் குரலின் நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள், அதில் இருக்கும் உண்மையை புரிய முயற்சி செய்யவும்

இன்னும் எத்தனை காலம்தான் நாங்கள் அமைதியை காக்க முயற்சி செய்வது ?

என் ரத்தமே சிந்தித்து ஒரு பதில் சொல்

உன் பதிலை எதிர் பார்த்த நிலையில் உன் உறவுகள்..!!

-IS

0 comments:

Post a Comment