- இது வரை வந்த படங்களை எதிர்க்காதவர்கள் இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்.?
- நூறு கோடி செலவு செய்து எடுத்த படத்தை இப்போது தடை செய்ய சொல்வது நியாயமா?
- சென்சார் துறை தணிக்கை செய்த படத்தை அரசு தடை செய்வது ஏன்.?
- முஸ்லிம் நாடுகளில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் படம் அனுமதிக்கப்பட்டு உள்ளதே.?
- இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறீர்களா?
- நீங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளா.?
- முஸ்லிம்களை குறித்து நேரடியாக தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லையே.?
- றிசான விவகாரத்தில் மவுனம் காத்த நீங்கள் இப்போது மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புக் குரல் எழுப்புகிறீர்கள்.?
- ஜனநாயக நாட்டில் கருத்து உரிமையை ஏன் தடை செய்ய முயல்கிறீர்கள்.?
- உலகில் நடப்பதை தானே திரை வடிவில் காண்பிக்கிறார்கள்.?
- திரைப்படம் என்பது ஒரு கலை. அதை கலையாக மட்டும் தானே பார்க்க வேண்டும்.!
- கமல் ஒரு நல்ல மனிதர். அவருக்கு முஸ்லிம்கள் மீது விரோதம் எதுவும் இல்லையே.?
- தமிழ் சினிமா உலகத் தரம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்.?
- நீங்கள் செய்வது கலாச்சார தீவிரவாதம் தானே.?
- உங்கள் எதிர்ப்பு படத்தை இலவச விளம்பரத்தை தேடிக் கொடுக்கிறதே.?
- நல்ல படங்கள் வந்த போதேல்லாம் அதை ஆதரித்து குரல் கொடுக்காத நீங்கள் இப்போது எதிர்ப்பது ஏன்.?
- அவர் இன்னும் கூட உங்களுடம் பேச்சு நடத்த தயாராக இருக்கிறாரே.? நீங்கள் ஏன் இன்னும் பிடிவாதமாக முழுமையா தடை செய்ய சொல்கிறீர்கள்.?
- படம் வெளிவர இருக்கும் கடைசி நேரத்தில் தடை கோரி அரசிடம் சென்றது ஏன்.?
- தேச பக்தி உள்ள எந்த முஸ்லிமும் இந்த படத்தை விரும்புவார் என கமல் சொல்லி இருக்கிறாரே.?
Sunday, January 27, 2013
Posted by Unknown
No comments | 7:30 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment