f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 11:33 AM
தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது ..!வன்முறையையே ஆதரிக்காத நாம் தீவிரவாதத்தை ஏன் தூக்கி பிடிக்க போகிறோம் ? தமிழக முஸ்லிம்கள் கோவை போன்ற இழிந்த சம்பவங்களால் மிகவும் காயப்பட்டனர் ..கல்விகூடங்களிலும் ,தொழிற்கூடங்களிலும்,அக்கம் பக்கத்திலும் மிகவும் கேவல பட்டனர் ..! சிறுது சிறிதாக மீண்டு ..

ஆம்புலன்ஸ் சேவை ,ரத்ததானம் ,என்று மக்களுடன் சகோதர துவத்தை மறு பயணம் ஆரம்பித்த வேலையில் ,இதைபோன்ற நச்சு கருத்துக்கள் மீண்டும் தமிழக முஸ்லிம்களை தனிமைபடுத்தி விட கூடாது என்ற எண்ணம் எங்களை இதை எதிர்க்க தூண்டுகிறது ..! திரையுலகத்தில் திறமை காட்ட துடிக்கும் இளைஞர்கள் மிகுந்துள்ள தமிழகத்தில் திரைப்படங்களையே அதன் வசனங்களையே பேசித்திரியும் கல்லூரி மாணவ செல்வங்கள் ,பள்ளி குழந்தைகள் ,தொழில் மற்றும் பொது இடங்கள் ..மீண்டும் இதைபோன்ற படத்தின் வசனங்கள் பல காயங்களை உண்டாக்கும் ..

முஸ்லிம்களை தனிமைபடுத்தும் ..இந்த காரணம் ரெம்ப அற்பமாக தெரியலாம் ஆனால் உண்மை ..பள்ளிகூடங்களில் எத்தனை முஸ்லிம் மாணவர்கள் மதத்தின் பெயரால் இழிவு செய்யப்படுகின்றனர் தெரியுமா?அவர்களின் காயங்களும் வலியும் ..எத்தனை கோடி கொடுத்தாலும் தகுமா?
-AH

0 comments:

Post a Comment