f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Wednesday, January 30, 2013

Posted by Unknown
No comments | 1:44 AM
எம். தமிமுன் அன்சாரி
(பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி இருக்கிறது. ஒரு சமூகத்தின் கோபத்தை, கோரிக்கையை கவனத்தில் கொண்டு சில காட்சிகளையாவது நீக்க வேண்டும் என நீதிபதி சொல்லி இருந்தால் அது ஓரளவாவது நீதிமன்றத்தின் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஆனால் எந்த கட்டுப்பாடும், அறிவுரையும் சொல்லப்படாமல் முழுமையாக தடையை நீக்க நீதிபதி கொடுத்திருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியை அளிக்கிறது.

எனினும் இது இறுதியானது அல்ல. மேல்முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் கூறி இருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

எனினும் இது தோல்வி அல்ல. இதுவரை இப்படத்திற்கு கொடுத்த எதிர்ப்பு என்பதே பெரிய வெற்றியாகும். இனி இதுபோன்ற சமூக விரோத திரைப்படங்களை எடுக்க வேண்டுமென்ற துணிச்சல் யாருக்கும் வராது என்பது உண்மை...

தமிழக முஸ்லிம்களும், சிறுபான்மை ஆதரவாளர்களும் கவலைப்பட வேண்டியதில்லை. சட்டத்தின் தீர்ப்பு என்ற வகையில் இதை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். சட்டத்தை தனிநபர்கள் யாரும் கையில் எடுக்க கூடாது. சட்டத்தை மீறி, ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக எந்தவித வன்முறைகளையும் யாரும் செய்ய அனுமதிக்க கூடாது. நமக்கு மிகுந்த பொறுப்புணர்வு இருக்கிறது.

நமது நிலைப்பாட்டை, நாம் ஏன் இந்த திரைப்படத்தை எதிர்க்கிறோம்? என்பதற்கான காரணங்களை சகோதர சமுதாய மக்களிடம் அறிவுப்பூர்வமாக விளக்க வேண்டும். மாறாக அதிரடியாக எதையாவது செய்தால் நமக்கு வன்முறை முத்திரை குத்தப்படும். இதனால் நடுநிளையாலர்களையும், நமது ஆதரவாளர்களையும் இழக்க கூடும். இது சிறுபான்மை சமூகத்திற்கு நல்லதல்ல.

நாம் ஒன்றுபடுவதும், நியாயம் பேசுவதும் நம்மை தனிமைப்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடக்கூடாது.

எனவே தவறான வார்த்தையை பயன்படுத்தி போஸ்டர் ஓட்டுவது, FACEBOOK இல் முரட்டுத்தனமாக கருத்துக்களை பரப்புவது, ஊடகங்களில் பொறுப்பற்ற தனமாக கருத்துக்களை கூறுவது ஆகியவற்றை தயவு செய்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்...

நாம் பன்முக சமூகங்களுக்கு மத்தியில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் எதையும் அணுக வேண்டும். நம்மை சுற்றிலும் வாழும் சகோதர மக்களுக்கு மத்தியில் நம் மீதான நல் எண்ணம கெட்டு போய் விடக்கூடாது. ஒரு திரைப்படம் அதற்கு காரணமாக இருந்து விடக்கூடாது.

எதையும் தோல்வியாக கருதாமல் அறிவுப்பூர்வமாக அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்க வேண்டும். சிறுபான்மை சமுதாய தலைவர்கள் இதுகுறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

எனவே கட்டுப்பாடு காத்து அமைதியுடன் பொறுமை காக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,

எம். தமிமுன் அன்சாரி
(பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)

0 comments:

Post a Comment