விஸ்வரூபம் திரைப்படம் இப்போது வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை சமுதாய ஆர்வலர்களாகிய நாம் அறிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளோம்.
ஆளும் கட்சி முஸ்லிம் சமூகத்தை பகடைகாயாக்கி தங்கள் பழி வாங்கும் அரசியலை அரங்கேற்ற தொடங்கி உள்ளது .தியேட்டர் உடைப்பு,பெட்ரோல் குண்டு வீச்சு என அனைத்துமே குறிப்பிட்ட ஒரு கட்சியினரின் கைங்கரியம் என தெரிய வருகிறது.விஸ்வரூப திரைப்பட உரிமை தங்களுக்கு கிடைக்காத கோபமும் கமலின் ஒரு சில நடவடிக்கைகளும் ஆளும் தரப்பை பாதித்ததன் விளைவுதான் இந்த தடை என்பதை தொடர்ந்து இந்த வழக்கை கண்காணித்து வரும் நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இதன் மூலம் நம் சமூகம் மற்றும் பொது மக்கள்,கமல் ரசிகர்கள் இடையே பிளவு ஏற்படுத்த வேண்டும். மனக்கசப்புகள் உருவாகி மோதல்கள் உருவாக வேண்டும்.இதனால் படத்திற்கு தடை ,முஸ்லிம் சமூகத்திற்கு இழப்பு என ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளனர்.
எனவே இந்த நேரத்தில் கமல் இறங்கி வந்துள்ளதை பயன்படுத்தி விவேகமாக நடந்து கொள்வதன் மூலம் நெடுங்கால முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் பாதுக்காக்க பட முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும்.இது குறித்து அவர்களிடமும் பேசியுள்ளோம்.சமுதாய அக்கறை உள்ளோரும் பேசுங்கள்.நமக்கு தேவை தற்காலிக வெற்றி அல்ல நிரந்தர வெற்றிதான்.நம் சமுதாயத்தை எவரும் பகடைக்காயாக்கி தங்கள் நலன்களை நிறைவேற்றி கொள்ள அனுமதிக்க விட மாட்டோம் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்போம்.
- இனிய வன்
via idealvision tnmedia
0 comments:
Post a Comment