f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Wednesday, January 30, 2013

Posted by Unknown
No comments | 1:55 AM


திங்கள், 28 ஜனவரி 2013

விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் அமீர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் அமீர் அளித்துள்ள பேட்டியில் கருத்து எது, சுதந்திரம் எது என்பதே தற்போது பிரச்னையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இது வரை நடந்த வன்புணர்வுகளுக்கு எழாத எதிர்ப்புகள் ஏன் தில்லி வன்புணர்வுக்கு மட்டும் ஏற்பட்டது என்பது எப்படி கேள்வி கேட்க முடியாததோ அது போலவே விஸ்வரூபத்திற்கு வந்துள்ள எதிர்ப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ள படி "அதிகாரம் என்பது தேவைப்படும் போது உபயோகிப்பது" எனும் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறிய அமீர் கருத்து சுதந்திரம் இருப்பதாலேயே விஸ்வரூபம் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்ப்பவர்களுக்கும் அதை எதிர்க்கும் சுதந்திரம் உள்ளது என்றும் கூறினார்.

விஸ்வரூபத்தை வெறும் சினிமாவாக பார்க்காமல் மக்களின் பிரச்னையை பிரதிபலிக்கிறது. மக்களை பாதிக்காத வரை தான் கருத்து சுதந்திரம் என்றும் விஸ்வரூபம் கலைஞனின் கருத்து சுதந்திரம் என்பதிலிருந்து பொது பிரச்னையாக மாறியுள்ளது என்றும் அமீர் கூறினார். நாட்டின் மக்களை பாதிக்கும் ஒன்றை கருத்து சுதந்திரமாக கருத முடியாது என்றும் அமீர் கூறினார்.

மேலும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துகள் சினிமாவில் பரப்பப்படுவதற்கு இஸ்லாம் குறித்த தவறான புரிதலே காரணம் என்றும் அமீர் கூறினார். திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவதால் மாத்திரம் ஒரு தீவிரவாதியை உருவாக்க முடியாது என்றும் இன்று தீவிரவாதி என்றால் மூஸ்லீம் எனும் கருத்துருவாக்கம் இருப்பதற்கு காரணம் சர்வதேச அரசியல் என்றும் கூறினார்.

ராமதாஸ், ரஜினி விஸ்வரூபம் குறித்து வெளியிட்ட அனைத்து கருத்துக்களுக்கும் தன்னிடம் பதில் உள்ளது என்றும் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நிச்சயம் பத்திரிகையாளர்களிடம் அதை தெரிவிப்பேன் என்றும் அமீர் கூறினார்.

சென்சார் போர்டு அனுமதி பெற்றும் தடை கோருவது சரியா என்ற கேள்விக்கு சென்சார் போர்டு என்பது நீண்டகாலமாக கேள்விக்குறியாக உள்ளது என்றும் தன் படம் ஆதிபகவனுக்கு சென்சார் அனுமதியும் விஸ்வரூபம் பிரச்னையும் முடிந்த பிறகு சென்சார் போர்டு குறித்து விரிவாக பேசுவதாகவும் அமீர் கூறினார்.

தேசபக்தி உள்ள முஸ்லீம்கள் விஸ்வரூபத்தை எதிர்க்க மாட்டார்கள் எனும் கமலின் கருத்துக்கு அமீர் தானும் தேச பக்தி மிக்க ஒரு முஸ்லீம் என்றும் படம் பார்த்த பின் தன் கருத்தை கூறுவேன் என்றும் கூறினார். மேலும் விஸ்வரூபம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியும் என்றாலும் படம் பார்த்த பின் சொல்வது முறையாக இருக்கும் என்றும் அமீர் கூறியுள்ளார்.

இந்நேரம் இணையதளம் : http://www.inneram.com/

0 comments:

Post a Comment