ஞாயிறு, 27 ஜனவரி 2013
விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தைத் திரையிட வேண்டுமென்று எதிரும் புதிருமாக செயல்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், பாஜகவும் இணைந்து கேரளத்தில் போராட்டம் நடத்தியுள்ளன.
கேரளாவின் திருவனந்தபுரம் கைரளி திரையரங்கில் விஸ்வரூபம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் நேற்று காலை அரசு நிர்வாகம் சார்பில் இயங்கும் அந்தத் திரையரங்கில் படம் பார்க்கப் போனவர்களிடம் படத்தைத் திரையிட முடியாது என்று திரையரங்கு மேலாளர் கூறியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பொதுவுடமைக் கட்சியின் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், பா.ஜ.க.வினரும் சேர்ந்து திரைப்படத்தைத் திரையிட வேண்டும் என்று முழக்கம் எழுப்பிப் போராடினர். மாநில அரசு தடை விதிக்காத நிலையில், திரையிட மாட்டோம் என்று அரசு சார்பு திரையரங்கம் கூறுவது மிகப் பெரும் தவறு என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 'கருத்துச் சுதந்திரம்' என்பதன் அடிப்படையிலும், பாஜக 'முஸ்லிம் எதிர்ப்பு'' என்பதன் அடிப்படையிலும் போராடியதாகத் தெரிகிறது.
இப்போராட்டத்தையடுத்து அங்கு படம் திரையிடப் பட்டது.
www.inneram.com
0 comments:
Post a Comment