f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:41 AM

ஞாயிறு, 27 ஜனவரி 2013 




சென்னை: முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பினைத் தொடர்ந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விஸ்வரூபம்

திரைப்படத்தின் மீதான தடையினை நீக்கவேண்டுமென கூறிய பாமக தலைவர் ராமதாஸுக்கு முஸ்லிம் அமைப்புகளில் ஒன்றான தமுமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ரியாபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"விஸ்வரூபம் திரைப்படத்தைத் தமிழகத்தில் திரையிடுவதற்குத் தமிழக அரசு விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.

சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அதனுடன் பாமகவின் கொடி, தலைவர்களின் பின்ணணி படங்கள் வன்னியர் சங்கத்தின் தீ சட்டி சின்னம் ஆகியவற்றின் காட்சி பிண்ணனிகளுடன் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதனை மரு. ராமதாஸ் அவர்கள் அனுமதிப்பாரா? இதேபோன்றுதான் இஸ்லாத்தின் அடையாளங்களுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை எடுத்ததினால்தான் முஸ்லிம்கள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன், நடிகர் அஜீத் இவர்களும்கூட கமல்ஹாசனின் விஷகருத்துகள் நிறைந்த விஷரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள படமான விஸ்வரூபத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து DAM999 என்ற படம் தமிழகத்திலே தடைசெய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த தடை மிகவும் நியாமானது ஏனெனில் தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி தமிழக மக்களின் உள்ளங்களை ரணப்படுத்தும் வகையில் அந்த படம் எடுக்கப்பட்டது தமிழக அரசு DAM999 படத்தை தடை செய்தது நியாமானது தான் என்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடாது என்று ஒருசில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது.

இதே அளவுகோலை பயன்படுத்திதான் மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழக அரசு திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடுவதற்கு தடைவிதித்தது. DAM999 மீதான தடையை வரவேற்ற இயக்குநர் பாரதிராஜா போன்றோர் DAM999 ஒர் அளவுகோலும் விஸ்வரூபத்திற்கு ஒரு அளவுகோலும் கையாள்வது நியாயம்தானா?

தமிழ் திரைப்படங்களில் ஒரு சாரார் தொடர்ச்சியாக முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்து வருகிறார்கள் அதன் உச்சகட்டமாக அமைந்துள்ளதுதான் விஸ்வரூபம் திரைப்படம்

அதேநேரத்தில் முஸ்லிம்களின் எதார்த்த நிலையை சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ள நீர்பறவையின் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதிராஜா போன்று கருத்து வெளியிட்ட திரைப்பட உலகினர் முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள ரணங்களை உணர்ந்து கமல்ஹாசன் போன்றோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

பாரதிராஜா அவர்கள் கமல்ஹாசன் நல்ல தமிழ் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் நமது தமிழ்நாடு சர்வதேச குற்றவாளியான முல்லா உமருக்கு புகலிடம் அளித்துள்ளதாக குறிப்பிடுவதுதான் நல்ல தமிழ் கலைஞருக்கு பாரதிராஜா வழங்கும் இலக்கணமா? இப்போது விஸ்வரூபம் திரைப்படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலேயே கவனம் செலுத்தும் கமல் ஒரு நல்ல கலைஞன் அல்ல; மாறாக அவர்தான் ஒரு கலாச்சார பயங்கரவாதி என்பதையே எடுத்துக்காட்டுகிறது."

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல்: ஹுஸைன் பாஷா
 www.inneram.com

0 comments:

Post a Comment