f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:16 AM
கருத்து சுகந்திரம் என்ற பெயரில் விஸ்வரூபத்தை படமாக மட்டும் பாருங்கள் இதை ஏன் தடை விதிக்கிறீர்கள் என்று கூறும் அறிவு ஜீவிகளுக்கு இந்த பதிவு..

திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பாருங்கள் என்றால் இது வரைக்கும் எந்த ஒரு திரைப்படமும் தடை செய்யாமல் இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதாவது தடை செய்யப்படாத படங்கள் இருக்கு என்று உங்களால் கூற முடியுமா..?

ஜாதிப்பெயர்களை பயன்படுத்தியதற்கே திரைப்படத்தின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள செய்தி உங்களுக்கு தெரியாதா.?வெரும் பெயர்தானே என்று அதை உதாசினப்படித்தினார்களா..?பெயர்களை பயன்படுத்துவதையே திருத்தம் செய்யும்பொழுது. இங்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும்
பொழுது பார்த்து கொண்டு சும்மா இருக்க எப்படி மனம் வரும்.

டேம் 999 படத்துக்கு தமிழகத்தில் அனுமதியில்லை .அந்த படத்தை எடுத்தவனுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா..?அதை மட்டும் படமாக பாருங்கள் என்று கூப்பாடு போடுங்களேன்..!

அதைப்பற்றிய செய்தி சுருக்கம்..

''கேரளாவில், முல்லைப் பெரியாறு அணை உடைந்து, கிராமங்களில் தண்ணீர் புகுவது போன்று எடுக்கப்பட்ட படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. இத்திரைப்படத்தை வெளியிட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக திரைப்பட இயக்குநர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாநில மக்களின் உணர்வுகளுக்குத்தான் நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதரின் உரிமைக்கு அல்ல. தமிழக மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் வகையில் காட்சியமைப்புகளைக் கொண்ட இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவது சரியல்ல. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.''

ஒரு மாநில மக்களின் உணர்வுகளுக்குத்தான் நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதரின் உரிமைக்கு அல்ல.///இதை கவனித்தீர்களா..அப்படியென்றால் தமிழ் மாநிலத்தில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கவில்லையே...? கமல் என்ற தனி மனிதனின் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவசியம் என்ன..?

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி தணிக்கை குழு அனுமதித்த பின் ஒரு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என அவன் கருத்து தெரிவித்துள்ளான். ஆனால் ''டேம் 999 படத்துக்கு'' தடை விதித்ததின் மூலம் ''ஒரு மாநில மக்களின் உணர்வுகளுக்குத்தான் நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதரின் உரிமைக்கு அல்ல.'' என்ற ஒரு வழியை உச்சநீதிமன்றம் கற்றுதருகிறது.

இந்த தீர்ப்பே 'விஸ்வரூபத்திற்கு'' முழுமையாக தடை விதிக்க தமிழக அரசிற்கு அதிகாரம் உள்ளது என்பது ஏனோ..'மணிஷ் திவாரி' க்கு தெரியவில்லை போலும்.
-AR

0 comments:

Post a Comment