பத்ம விருதுகளிலிருந்து கமலஹாசனின் பெயர் நீக்கம் : விஸ்வரூபம் காரணமாம்
இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த 108 பேருக்கு இம்முறை இந்த பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், தொழிற்துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இந்திய அரசுப் பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் யஷ்பால் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், உள்ளிட்ட 24 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி, நானா படேகர், திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி உள்ளிட்ட 80 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்படும்.
கமலின் பெயர் நீக்கம்
இதேவேளை, பத்பூஷன் விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட உலக நாயகன் கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், 'விஸ்வரூபம்' சர்ச்சைதான் இதற்கு காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் சிந்திக்க வைத்ததாகவும் இதனாலேயே பெயர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற

0 comments:
Post a Comment