இத்தோடு முடிவுக்கு கொணர்வோம்.
விஸ்வரூபங்களால் நிரம்பி வழிகிறது நம் உள்ளங்களும்,
சமூக வலை தளங்களும்..
நமக்கு எதிராக கருத்து கூறும் அனைவரும் எதிரிகளும் அல்ல.
நமக்கு ஆதரவாக பேசும் அனைவரும் நண்பரும் அல்ல.
தன்னுடைய தேவைகள், அல்லது புரிதலின் அடிப்படையில் ஒருவரது ஆதரவோ, எதிர்ப்போ அப்போதைக்கு அமையலாம். பின் அது மாறலாம்.
இதற்கு நிறைய உதாரணங்களை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் இருந்தே காண முடியும்.
அதை விட்டு விட்டு, நம்மை ஆதரிக்கிற அல்லது எதிர்க்கிற
எல்லோரையும் உடனே ஒரே தட்டில் வைத்து , குய்யோ முறையோ என தூற்றுவதோ , அல்லது தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவதோ சரியான செயல் அல்ல.
சரியான புரிதலும் அல்ல..
எதிர் கருத்து சொல்லும் எல்லோரையும் உடனுக்குடன் நம் எதிரி லிஸ்டில் சேர்ப்பதாக இருந்தால், ஓராண்டுகளில் பெரும்பாலான நபர்கள் நம் எதிரிகள் பட்டியலில் தான் இடம் பெறுவார்கள்.
வெற்று ஆவேசத்தை தவிர்த்து விட்டு, சற்றே நிதானத்தோடும் விவேகத்தோடும் எதையும் அணுகவது நல்லது.
விஸ்வரூபம் விவகாரத்தில் அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல் பட்ட தமிழக முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பிற்கும் அதனை வழிநடத்தி சென்ற தலைவர்களுக்கும் முதலாவதாக மனமார்ந்த வாழத்துக்கள் மற்றும் நன்றிகள்.
நாம் எதைச் செய்தியாக கொடுக்கிறோமோ, எதை சொல்கிறோமோ, அல்லது எதை செயலாக செய்கிறோமோ, அதை அப்போதைய சூழ்நிலை மற்றும் மன நிலையின் அடிப்படையில், தனது கருத்து உருவாக்கத்தை நம்மை பார்ப்பவர் ஏற்படுத்திக் கொள்வார்.
நாமும் அப்படியே.
எனவே இன்றைய சூழ்நிலையில் அவசரப் படாமல் ,
கிடைத்ததை எல்லாம் ஆர்வத்தின் அடிப்படையில்,, எந்த ஆய்வும் இன்றி பரப்பிக் கொண்டு திரிவதை கைவிட்டு சற்றே பொறுமையுடன் நடப்பதை உன்னிப்பாக கவனிப்போமாக.
கமல் முஸ்லிம் கூட்டமைப்பினரோடுதான் இரண்டு முறை பேச்சு நடத்தினார் பிறகு படத்தை அவர்களுக்கு சிறப்பு முன்காட்சியாக திரையிட்டுக் காட்டினார்.
படம் பார்த்த பின் பெரும் அதிருப்தி அடைந்த முஸ்லிம் கூட்டமைப்பினர் அரசிடம் முறையிட்டனர். அரசு இரண்டு வார காலம் படத்தை வெளியிட தடை செய்தது. வழக்கு உயர் நீதிமன்றம் சென்றது. இப்போது வழக்கு விவகாரத்தில் நடைபெற்றதும் , உயர் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பும் , அதன் பின் நடைபெற்ற மேல் முறையீடும் நாம் அறிந்ததே.
இதனிடையே கமலின் செயல் குறித்தும் சற்று பார்ப்போம்.
கமல் தன் படத்திற்கு தடை என்றவுடன் கோபப்பட்டார்.
கலாச்சார தீவிரவாதம் என்றார்.
சிறு குழுக்கள் என இழிவு செய்தார்.
தன்னை பகடைக் காயாக்கி அந்த குழுக்களெல்லாம் ஆதாயம் அடைய நினைப்பதாகவும்,
தேச பக்தி உள்ள எந்த முஸ்லிமும் இதை எதிர்க்க மாட்டார் எனவும் அமெரிக்காவில்
இருந்து அறிக்கை விட்டார்.
பின் தடை வென்றார். மகிழ்ச்சிக் களிப்பில் கவிதை வாசித்தார்.
அந்தோ.! ஒரு நாள் கூட நீடிக்கவில்லை அவரது மகிழ்ச்சி.
மீண்டும் தடை; திரையிட்ட அரங்குகள் தாக்குதல்,
என சற்றே உடைந்து போன கமல் மீண்டும்
வருந்தினார். கலங்கினார். நாடு துறக்கும் நிலைக்கு வந்து விட்டதாக அறிக்கைகள் விட்டார்.
தன காயங்களுக்கு இது வரை கிடைக்காத மருந்தை தன சக நடிகர்கள் சிலரிடம் இருந்து பெற்றார்.
இப்போது கூட்டமைப்பில், விஸ்வரூபம் விவகாரத்தில் இல்லாத,
இரண்டு முஸ்லிம் பிரமுகர்களை, தன்னோடு பேச அழைத்து, பேசி,
, பத்திரிக்கை செய்தி கொடுத்து, தான் முஸ்லிம்களோடு ஒரு குடும்ப உறுப்பினர் போலத்தான் வாழ்கிறேன் என்றும் , தேவைப்படும் காட்சிகளை நீக்க சம்மதிப்பதாகவும் பத்திரிகை , தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து பேட்டி அளித்துள்ளார்.
நடப்பதை எல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்கிறது இருக்கிறது தமிழக முஸ்லிம் கூட்டமைப்பு.
எதிர்க்கும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளை கலாச்சார தீவிரவாதிகள் என்றும், சிறு குழுக்கள் என்றும் தூற்றிய உலக நாயகன் அவர்கள் இப்போது அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
பரபரப்புக்கு இடம் அளிப்பதை விடுத்து அமைதியாக இருந்து இனி நடப்பதை பார்ப்போம்.
இது வரை இணைந்து இருந்த தமிழக முஸ்லிம் கூட்டமைப்பின் கரங்கள் இனியும் இணைந்து இருந்து, ஒருமித்து நல்ல முடிவை எடுக்கட்டும். தமிழகம் இந்த விவகாரத்தில் இருந்து விடுபட்டு , அது பயணிக்க வேண்டிய வேறு பல பயணங்களை நோக்கி முன்னேறட்டும்.
எது எப்படியோ,
சினிமா நண்பர்களுக்கும் , முஸ்லிம் சமூகத்திற்கும் இது ஒரு பாடம்.
நல்ல ஒரு பதிவு.
ஒற்றுமையின் வலிமைக்கு கிடைத்த பலன்.
இது வரை அனுபவித்து வந்த வலியை ஊடகங்கள் வாயிலாக அழுத்தமாக பதிவு செய்யக் கிடைத்த ஒரு அழகிய வாய்ப்பு.
இஹ்லாசான மன நிலையோடு, இறைவனிடம் கையேந்துவோம்.
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்தது தானே!
-AA

0 comments:
Post a Comment