விஸ்வரூபத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான போராட்டம்
கமல்ஹாசனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான போராட்டம்
முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படங்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான போராட்டம்.
இதை சரியாக புரிந்துகொண்டு உங்கள் கருத்துக்களையும் பதிவுகளையும் மேற்கொண்டால் எல்லோருக்கும் நல்லது.
தயவுசெய்து மற்ற மதத்தவர்களையும் அவர்களது உணர்வுகளையும் மதியுங்கள்.
கமல் இலாபம் அடைவதாலோ நஸ்ட்டம் அடைவதாலோ எங்களுக்கும் எந்த இலாப நஸ்ட்டமுமில்லஉங்களுக்கும் இல்லை... பிறகேன் இப்படி.
படம் வந்தால் போய்ப் பாருங்கள் உங்கள் உலக நாயகன் சொல்லியிருப்பதை நடுநிலையாளனாக இருந்து பாருங்கள்... அதில் என்ன நியாய அநியாயம் இருக்கிறதென்பதைப் பாருங்கள்... மேலோட்டமாகப் பார்க்காமல் அதில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், நடவடிக்கைகளைப் விளங்கி பாருங்கள். அதில் விசம் இருக்கிறதா அமுதம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்...
அதைவிட்டுவிட்டு எங்கள் மீதும் எங்கள் புனித மார்க்கத்தின்மீதும் விசத்தைக் கக்காதீர்கள்..
இந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள் இந்துக்களை இலக்காக கொள்ளவில்லை கமலையும் திரைப்படத்தையும் மாத்திரமே இலக்காக கொண்டார்கள் என்னும் அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள்..
எங்கோ இருக்கும் உங்களை யாரென்றே தெரியாத கமலுக்கு வக்காளத்து வாங்கி கூட இருக்கும் நற்பாகப் பழகும் முஸ்லிம்கள் எங்கள் உறவுகளை முறித்துக்கொள்ளாதீர்கள்.
(எதுவுமே பேசக்கூடது என்றுதான் எண்ணியிருந்தேன் ஆனால் உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு ஏதாவது சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றியது. இப்படிப்பட்டவர்களும் என் நண்பர் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதை எண்ணுகையில் வேதனையாக இருக்கிறது.)
#Admin > இதுபோன்ற பல சகோதரர்களின் கருத்துக்கள் கமல் ரசிகர்களின் கண்மூடித்தனமான கடும்போக்கினால் சுக்கு நூறாகின்றதை எண்ணும்போதே மனம் தாங்கவில்லை. அன்பர்களே தயவு செய்து ஏனைய மத நம்பிக்கைகளையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள். இது கமலுக்கும் இங்கு கருத்துக்களை பகிர்பவர்களுக்குமான தாழ்மையான வேண்டுகோள். தேவையற்ற சொற்களை கருத்துக்களில் தவிருங்கள்.
இதனை நடுநிலை சிந்தனையாளர்கள் சிலர் புரிந்துகொள்வர் பலர் பிரிந்து செல்வர்.
நன்றி! - via Ahmed suhail
0 comments:
Post a Comment