f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 12:11 PM
கமலை காயப்படுத்தி ரத்தத்தை ருசி பார்க்காதீர்கள்: பாரதிராஜா (வீடியோ இணைப்பு)
-------------------------------------------------------------------------

தமிழ் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தமிழ் கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தாதீர்கள் என்று இயக்குனர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, லைக்காட்சியில் நொண்டிச்சாக்காக சிலர் சொல்கிறார்கள்.படத்தில் பாட்டு இல்லை. காதல் காட்சிகள் இல்லை. கொமெடி இல்லை.

இது ஒரு ஆவணப்படமென்று சொல்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.

தொழில் நுட்பத்திலும் கதை சொல்லும் விதத்திலும் உலக தரத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு படத்தால் உயர்ந்து நிற்கிறான் இந்த தமிழன் என்று சக கலைஞனாக பெருமைபட்டு வந்தவன் நான்.

ஒரு ஆவணப் படத்திற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து படமெடுக்க யாராவது முனைவார்களா என்ன? இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண குடிமகனை, கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.

உலகில் நடந்த நிகழ்வுகளை பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை வாழ்க்கையில் அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூதகமாக திரையில் சொல்லுவது ஒரு படைப்பாளியின் தார்மீகமான படைப்பு சுதந்திரம்.

தயவு செய்து சகோதரர்களே தங்களை பணிவோடு, பண்போடும் பாசத்தோடும் கேட்டுக் கொள்கிறேன்.யார் எந்த அடையாளங்களை கொண்டிருந்தாலும் இந்த மண்ணில் உள்ளவரை அவன் இந்தியனே.ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை தமிழ் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒருசில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.

என் இனிய தமிழ் மக்களே நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள். சிந்தித்து பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கைகொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை.

தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம் என்றும் தலைநிமிர்ந்து நிற்போம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Click Here••►http://tamilspace.com/2013/01/26/bharathiraja-statement-regarding-vishwaroopam/

0 comments:

Post a Comment