f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Sunday, January 27, 2013

Posted by Unknown
No comments | 10:15 AM
ஒரு விவசாயி, தன் சொந்த நிலம், தன் சொந்த உழைப்பு என்பதற்காக கஞ்சா பயிரிட சிறப்புரிமை கோர முடியாது. கலை என்பதும் ஓர் உற்பத்திப் பொருளே. அது சமூகத்துடன் வினைபுரிவதால் விளைவுகள் உண்டாகும் என்னும்போது எப்படி தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்க முடியும்?

சினிமா, நாடகம், எழுத்து... என எதுவும் யார் மூளையிலும் சுயம்புவாக உருவாவதில்லை. கருவிலே திருவானவர் எவருமில்லை. எல்லையற்ற இயற்கை மற்றும் சமூகத்துடன் நாம் எந்த பண்புடன் எந்த விழுக்காட்டில் உறவாடுகிறோம் என்பதை வைத்து மேற்கண்ட அம்சங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆகவே உங்களது மண்டைக்குள் இருக்கும் உங்கள் சொந்த மூளையில் உதித்த சொந்த கருத்தானாலும் அது பொதுச்சொத்தே!

நன்றி நண்பர் Perazhagan Bala
நன்றி :Barathi Thambi

0 comments:

Post a Comment