f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 12:20 PM
இந்த பதிவை தாங்கள் அனைவரும் முழுமையாக படிப்பீர்கள் என்று நம்புகிறேன்..

விஷவரூப விவாதங்கள் இன்று ஒவ்வொரு தமிழனின் மனதிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.படத்தை ஆதரித்தும்,எதிர்த்தும் பல குரல்கள் ஒலிக்கின்றது.தங்களுடைய கருத்துக்களை.படத்தை தடைசெய்தது மிகசரியே என்றுவாதிடுபவர்களில் நானும் ஒருவன்.அப்படியிருக்க படத்தை எதிர்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்...

!)ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில் நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம் இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?

2)குஜராத் கலவரத்தில் நடந்த கொடுமைகளை மையபடுத்தி எடுக்கப்பட்ட பர்ஜானியா,பிராக் போன்ற படங்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று தடைசெய்யபட்டதே அப்போது கருத்துசுதந்திரம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே?

3)கமல்ஹாசனின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நல்லவர்களே இதே கமல் நாளை பகவகீதையை தீவிரவாத நூலாகவும்,கோவில்கள் ஆசிரமங்களை தீவிரவாதபயிற்சி முகாம்களாகவும்,ஹிந்துக்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து படம் எடுத்தால் அதனை கண்டித்து நிச்சயம் பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் வீதிக்கு வருவார்கள்.அவர்களை கண்டித்து ஸ்டேடஸ் போட தைரியம் இருக்கிறதா?

4)நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைகளாக தெரியலாம்.ஆனால் அந்நாட்டுமக்களின் பார்வையில் அது ஒரு தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் சுதந்திரப்போர்.அதில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவத்தினர் தியாகிகள்.கமல்ஹாசன் ஒருவேளை சிங்கள படையின் தளபதியாக பொறுப்பேற்று ஈழப்புலிகளை வேட்டையாடி இலங்கையை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதுபோல் படமெடுத்தால் அதனை இருகரமேந்தி வரவேற்க நீங்கள் தயாரா?

5)சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவைத்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த சம்பங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சுவாரஸ்யம் உள்ளவை.ஆனால் அதில் தொடர்புடைய அரசியல் தலைவர்களை மையபடுத்தி ஒரு படம் எடுக்க எந்த சினிமாகாரனிற்க்காவது தைரியம் உள்ளதா?

6)உசாமா இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்று சொல்லி லட்சகணக்கான அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா வீசிய குண்டில் தன் குடும்பத்தை இழந்த அப்பாவி ஆப்கான் இளைஞன் அமெரிக்க ராணுவத்தை பழிக்குபழி வாங்குவதாக படம் எடுத்து அதில் அப்கான் இளைஞனாக நடிக்க கமல் மட்டுமல்ல எந்த கலைகூத்தாடிக்காவது தைரியம் இருக்கா?

7)வெறும் 20 பேர் மிரட்டலுக்கு அரசு பணிந்து படத்தை தடைசெய்வதா?என்று சிறுபிள்ளைதனமாக ஒருவர் கேள்விகேட்க்கிறார்.சுமார் 80 லட்சம் முஸ்லீம் மக்கள் வாழும் தமிழகத்தில் அவர்கள் நடத்தும் போராட்டம் என்பது இவருக்கு இவ்வளவு அற்பமாக தெரிகிறது.முடிவுகளை எடுப்பதில் மிகவும் உறுதியானவர் முதல்வர் ஜே என்பது சிறுபிள்ளைக்குகூட தெரியும்.அப்படி பட்டவர் இந்த விஷயத்தில் இப்படி ஒரு தடை முடிவை எடுத்திருக்கும்போதே அதன் தாக்கம் என்ன என்பது இவருக்கு தெரியவில்லையா?

ஒருவரின் கலைசுதந்திரம் காக்கப்படவேண்டும் என்றுபேச ஒருவேளை மெய்ஞானம் தேவைப்படலாம். ஆனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனஉணர்வுகளை புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் போதும்..

0 comments:

Post a Comment