நானும் கமலுக்கு ஆதரவு தான்...
.....
.....
.....
.....
அவருடைய நடிப்புக்கு, அவருடைய திறமைக்கு,
அவருடைய தொழில்நுட்பத்திற்கு, அவருடைய உழைப்பிற்கு,
அவருடைய விடாமுயற்சிக்கு,
ஆனால்...
அவருடைய விஸ்வரூப படக்கதைக்கு அல்ல.
இஸ்லாமிய கூட்டமைப்பு, படத்தினுடைய கதையை தான் இறையாண்மைக்கு எதிராக உள்ளது என ஜனநாயக முறைப்படி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டது.
அரபி எழுத்தைப் போல் படத்தின் பெயருடைய எழுத்து வடிவம் வைத்தது, மீலாது நபி அன்றைக்கு (25.1.2013) படத்தை வெளியிட நினைத்தது, போன்ற செயல்கள் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ நேற்று வந்த நடிகரோ, இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்லவே இவர்.
ஒவ்வொரு விஷயத்தையும் கச்சிதமாக நிறைவேற்றிருக்கும் இவர், இதை கலையாக பார்க்கச் சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.
விஸ்வரூபம் என இப்படத்திற்கு பெயர் சூட்ட காரணம் என்ன?
விஸ்வரூபம் என்று எதை சொல்கிறார் கமல்?
எதனுடைய விஸ்வரூபம்?
முஸ்லிம்களுடைய விஸ்வரூபமா?
இஸ்லாத்தினுடைய விஸ்வரூபமா?
கமலுடைய விஸ்வரூபமா?
கமல் நடித்த குருதி புனல் என்கிற படத்தில் இறுதிக் காட்சியில் திரைக்குப் பின்னால் குரல் ஒலிக்கும் ...
"தீவிரவாதிகள் பிறப்பதில்லை...
உருவாக்கப் படுகிறார்கள்!
உருவாக்குவதில் பெரும் பணி அரசியலுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ளது. நாளைய தலைமுறை வழிபடப்போகும் தெய்வத்தின் உருவம் துப்பாக்கி வடிவில் இல்லாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை"
நடந்து முடிந்தவை அனைத்தும் அத்தியாயங்களே!
கதை இன்னும் முடியவில்லை. அதை தயவு செய்து முடித்து வையுங்கள் "
என முடிவடைகிறது.
தீவிரவாதிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு அரசாங்கத்திற்கு உண்டு என சுட்டிக் காட்டியமையால் தீவிரவாதிகள் உருவாகாமல் காப்பதற்கு அரசுக்கு இதன் முக்கியத்துவத்தையும் கவனத்தையும் இஸ்லாமியக் கூட்டமைப்பு கொண்டு சென்றது சரி தானே?!
ஒரு சிறுவனுடைய கண்களைக் துணியால் கட்டிக் கொண்டு பல்வேறு செல்போன்களை வைத்து அந்த சிறுவன் ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்து செல்போனின் மாடல்களை சொன்னால் அந்த குழந்தையின் திறமையை நாம் என்ன சொல்வோம்? அந்த குழந்தையை வளர்த்த பெற்றோர்களை குறித்து அவர்களுடைய பயிற்சியைக் குறித்து நாம் எண்ணுவோமா இல்லையா? ஆனால் இந்த விஸ்வரூபம் படத்தில் ஒரு முஸ்லிம் சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு பல ரக துப்பாக்கிகளை அடையாளம் சொல்கிறான்.
அவனை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?
விஸ்வரூபத்தில் சொல்லக் கூடிய இந்தக் காட்சிக்கு கமலின் பதில் என்னவோ?
இதற்க்கு முன் எத்தனயோ படங்கள் வந்தபோது வாய் திறக்காத இவர்கள் இப்பொழுது மட்டும் பிரச்னை செய்கிறார்களே என்கிறார்கள்.
உணவுகள் ஒவ்வொரு தட்டாக பரிமாறிக் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு தட்டிலும் குறைகள். ஒன்றில் உப்பு குறைவு. இன்னொன்றில் காரம் அதிகம். மற்றொன்றில் சுவையே இல்லை. இவ்வாறாக ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கிறது. பிறகு வந்த ஒருத் தட்டில் (துப்பாக்கி)அதிக குறை கண்டபோது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இப்பொழுது இறுதியாக வந்தத் தட்டில் (விஷ்வரூபம்) விஷம் அதிகமாக உள்ளது என்றதால் அதைதான் சுட்டிக்காட்டி உண்ணாமல் தடுக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
இப்படத்தில் முஸ்லிம்களை தரக்குறைவாக பேசப்படவோ , காண்பிக்கவோ இல்லையே என கேட்கிறார்கள்.
கைப் புண்ணுக்கு கண்ணாடித் தேவையில்லை என்பது நமக்குத் தெரியும். பொதுவாக படக்காட்சியில் ஒருவரை மொத்தமாக சேர்ந்து அடிக்கப் போவதை சிம்பாலிக்காக ஹோட்டல் கடையில் கொத்துப் பொராட்டா போடுவதை காண்பிப்பார்கள்.
அதைப் போல ஒருவனைத் துரத்தி சென்று கத்தியை ஓங்கும்பொழுது அன்னாசிப் பழத்தை சீவுவதை காண்பிப்பார்கள். இதனுடைய அர்த்தத்தைக் கூட விளங்காதவர்கள் ஒன்றும் தமிழர்கள் இல்லை என நினைக்கிறேன்.
நூறு கோடி செலவு செய்யப்பட்டு எடுத்தது அவருடைய எதிர்காலம் என்ன என்று கேட்கிறார்கள்.
ஒரு வீட்டை கட்டுவதற்காக திட்டமிட்டு அனுமதி பெற்று பல கோடி ரூபாயிக்கு வீட்டைக் கட்டி முடிக்கும்பொழுது,
அதிகப்படியான பகுதி அரசாங்கத்தின் இடத்திற்கும் சாலையை ஆக்கிரமித்ததும் தெரிய வருகின்றபோது, அதனால் பாதிக்கின்ற பொது மக்கள் மறியலிலும், வீட்டை அகற்றக் கோரி அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, அரசு அதை இடிக்க சொல்கின்ற பொழுது, சிலர் சொல்வார்களாம்:
பரவாயில்லை. எத்தனை கோடி செலவு செய்து வீட்டை கட்டியிருக்கிறார்...இந்த நேரத்தில் இடிக்க சொன்னால் அது எப்படி நியாயம் என்று.... என்ன வேடிக்கை?
ஜனநாயக நாட்டில் கருத்துரிமை இல்லையா எனக் கேட்கிறார்கள்.
சேரியில் வாழும் மக்களை அல்லது ஏதேனும் ஜாதியை அல்லது மருத்துவர்களை, ஏன்? நடிகர் நடிகைகள் திருடுவது போன்றோ கொலை செய்வதே அவர்களது தொழில் என்றோ அல்லது வேறு ஏதேனும் குற்ற செயல்கள் செய்வது போன்றோ காட்டினால் சம்மந்தப்பட்டவர்கள் இதை எதிர்ப்பார்கள் அல்லவா?
இங்கே அவர்களிடம் இது ஜனநாயக நாடு எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. கலையை கலையாக பாருங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கலையை கொலை செய்வது நியாயமா...?
மேற்சொன்னவைகள் கூட சில துறை, அமைப்பு, குறிப்பிட்ட நபர்கள் மீது சொல்லப்படுகின்ற விஷயம். ஆனால் இப்படக் கதை ஒட்டுமொத்த சமூகத்தையே, மதத்தையே கொச்சைப்படுத்துகின்ற செயல் என்பதால், இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது என்பதனால் தான் விஸ்வரூபம் படக்கதையை எதிர்க்கிறார்கள். மாறாக கமலையோ அவரது திறமயையோ அல்ல.
நானும் கமலுக்கு ஆதரவு தான்...
ஆனால் விஸ்வரூபத்திற்கு அல்ல.
- கமல் ரசிகன்.
-IDEAL VISION

0 comments:
Post a Comment