DAM999 படத்தை தடை செய்யும்போதோ அல்லது The Davinci Code படத்தை தடை செய்யும்போது கேட்டிருக்கலாமே! இலங்கை தமிழர் பற்றிய R.K. செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை படத்தை ஏன் 15 ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்தார்கள்? புவனேஸ்வரி என்ற ஒரு விபச்சாரி சில நடிகைகளின் பெயர்களை விபச்சாரிகள் என பட்டியலிட்டதை ஒரு பத்திரிகை வெளியிட்டதற்காக எதற்காக திரை உலகமே போராடியது? ஒரு பத்திரிகை செய்தியால் அந்த நடிகைகள் கற்பிழந்தவர்கள் ஆகிவிடுவார்களா? ஒரு பத்திரிக்கை செய்தி சீரழித்துவிடும் அளவிற்கு அவர்களது கற்பு அவ்வளவு வலிமை அற்றதா? என அப்போது ஏன் கேட்கவில்லை? மற்றவர்கள் செய்யும்போதெல்லாம் நியாயமாக படும் ஒரு விஷயம் இப்பொழுது மட்டும் அநியாயமாக தெரிகிறதா?
தமிழர்களுக்கு நன்மை பயக்கும் சேது சமுத்திர திட்டம் இந்துக்களின் நம்பிக்கையை உணர்வுகளை புண்படுத்துகிறது என்று சொன்ன பொழுது அதை ஏற்றுக்கொண்டு வாயை திறக்காதவன் எல்லாம் ஒரு சமூகத்திற்கு ஒரு படத்தால் அதே இன்னல்கள் வருகிறது என்று சொல்லும் பொழுது உனக்கு ஏன் உணர்வும் உணர்ச்சியும் வருகிறது என்று கேள்வி கேட்கிறான்?
குஷ்பு சாமி படம் போட்ட சேலையை கட்டினால் என் மத உணர்வை புண் படுத்திவிட்டது என்று கத்தியவனெல்லாம் குர் ஆணையே தீவிரவாத நூலாக சித்தரித்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும்போது அது கருத்து சுதந்திரம் என்கிறான்.?
கற்பு என்பது திருமணத்திற்கு பின்புதான் அவசியம் என்று கூறிய குஷ்புவை கோர்ட் கோர்ட்டாக படியேரவிட்டவனெல்லாம் இன்று திருமணமே செய்யமால் குடியும் குடித்தனமாகவும் இருக்கும் கமலை கலாச்சார கதாநாயகன் என்று சொல்கிறான் ?
குடிப்பது பெண்களின் உரிமை என்று கூறிய திரிஷாவிற்கு மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படும் என்று சொன்னவனெல்லாம் மதுக்கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும் என்று குரல் கொடுக்கும் எங்களை கலாச்சார தீவிரவாதியாக சித்தரிக்கிறான் ?? (ஆண்கள் மட்டும் குடிக்கலாமோ )
பிப்ரவரி 14 அன்று காதலர்களுக்கு கல்யாணம் செய்து வைப்போம் என்று தாலியோடு அலைபவனெல்லம் உதட்டோடு உதடு வைத்து முத்தக்காட்சி வைக்கும் கமலை ஆதரித்து பேசுகிறான் (நிஜ வாழ்கையில் காதலித்தால் கலாச்சார சீர்கேடாம், திரையில் காதலித்தால் கலாச்சார கதானயகனாம் ).
__________________________________________________________
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
கருத்து சுகந்திரம் என்ற பெயரில் விஸ்வரூபம் என்ற தருத்தினியத்தை படமாக மட்டும் பாருங்கள் இதை ஏன் தடை விதிக்கிறீர்கள் என்று கூறும் அறிவு ஜீவிகளுக்கு இந்த பதிவு..
திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பாருங்கள் என்றால் இது வரைக்கும் எந்த ஒரு திரைப்படமும் தடை செய்யாமல் இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதாவது தடை செய்யப்படாத படங்கள் இருக்கு என்று உங்களால் கூற முடியுமா..?
ஜாதிப்பெயர்களை பயன்படுத்தியதற்கே திரைப்படத்தின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள செய்தி உங்களுக்கு தெரியாதா.?வெரும் பெயர்தானே என்று அதை உதாசினப்படித்தினார்களா..?பெயர்களை பயன்படுத்துவதையே திருத்தம் செய்யும்பொழுது. இங்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும்
பொழுது பார்த்து கொண்டு சும்மா இருக்க எப்படி மனம் வரும்.
டேம் 999 படத்துக்கு தமிழகத்தில் அனுமதியில்லை .அந்த படத்தை எடுத்தவனுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா..?அதை மட்டும் படமாக பாருங்கள் என்று கூப்பாடு போடுங்களேன்..!
அதைப்பற்றிய செய்தி சுருக்கம்..
''கேரளாவில், முல்லைப் பெரியாறு அணை உடைந்து, கிராமங்களில் தண்ணீர் புகுவது போன்று எடுக்கப்பட்ட படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. இத்திரைப்படத்தை வெளியிட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக திரைப்பட இயக்குநர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாநில மக்களின் உணர்வுகளுக்குத்தான் நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதரின் உரிமைக்கு அல்ல. தமிழக மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் வகையில் காட்சியமைப்புகளைக் கொண்ட இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவது சரியல்ல. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.''
ஒரு மாநில மக்களின் உணர்வுகளுக்குத்தான் நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதரின் உரிமைக்கு அல்ல.///இதை கவனித்தீர்களா..அப்படியென்றால் தமிழ் மாநிலத்தில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கவில்லையே...? கமல் என்ற தனி மனிதனின் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவசியம் என்ன..?
இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி தணிக்கை குழு அனுமதித்த பின் ஒரு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என அவன் கருத்து தெரிவித்துள்ளான். ஆனால் ''டேம் 999 படத்துக்கு'' தடை விதித்ததின் மூலம் ''ஒரு மாநில மக்களின் உணர்வுகளுக்குத்தான் நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். தனி மனிதரின் உரிமைக்கு அல்ல.'' என்ற ஒரு வழியை உச்சநீதிமன்றம் கற்றுதருகிறது.
இந்த தீர்ப்பே 'விஸ்வரூபத்திற்கு'' முழுமையாக தடை விதிக்க தமிழக அரசிற்கு அதிகாரம் உள்ளது என்பது ஏனோ..'மணிஷ் திவாரி' க்கு தெரியவில்லை போலும்..
0 comments:
Post a Comment