f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:29 AM
விஸ்வரூபம் தொடர்பாக கருணாநிதி அறிக்கை............!!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலைஞானி கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்‘ திரைப்படம் தொடர்பாக; தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ரிபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கலைஞானி கமல்ஹாசனும், இஸ்லாமிய சமுதாயத்திடம் பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ கிளர்ச்சிகளையோ, நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை, அவற்றை எதிர்த்தே குரல் கொடுத்திருக்கிறோம். இஸ்லாமிய சமூகத்தினர்க்கும், பிற சமூகத்தினர்க்கும் இடையே நல்லுறவு என்றைக்கும் பட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் மிகுந்த அக்கறை உடையவன் என்பதை எவரும் மறுக்க முடியாது.

அந்த அடிப்படையில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை, மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை - கலந்தாலோசனை மூலமாக, முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சட்டம் - ஒழுங்கு அமைதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment