f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 10:59 AM
"விஸ்வரூபம்"

சில நாட்களுக்கு முன் வெளிவந்த "ட்ரெய்லர்", அதன் பின் வந்த நடிகர் கமலஹாஸனின் அன்பான வேண்டுகோள், முஸ்லிம் அறிஞர்கள்,சமுதாயத்தலைமைகளின் பிரதினிதிகள் சந்திப்பு, நேற்று முன் தினம் சிறப்புத்திரையிடல், திரைப்படத்தை பார்த்த பின் பார்த்தவர்களின் பேட்டிகள்,இணையதளத்தில் பல்வேறு குழுக்களின் குமுறல்கள்,பதிவுகள்
இவையனைத்தும் வரவிருக்கும் பரபரப்பான ,பதட்டமான சூழ்நிலையை கட்டியங்கூறுகின்றன.

ஆஃப்கானிஸ்தானின் முல்லா உமரை கோவை கரும்புக்கடை, உக்கடம் பாயாகவும், 12 வயது சிறுவனை போராளியாகவும், மாயூரத்து(ஶ்ரீ ரங்கம்) பிராமணப்பெண்ணின் மதியூகத்தையும், "தமிழ் ஜிஹாதிகள்" என்ற புது சொல்லாடலை புழக்கத்தில் விடவும், தொழுகின்றவர்,நெற்றியில் தலை தரையை முத்தமிடுதலின் காரணமாக லேசான தழும்புடையவர்கள், பயணங்களின் போது படிக்கும் பழக்கமுடையோர் குர்ஆனை படிக்கின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளது என்பன பல செய்திகள் கவலையுறச்செய்வது நியாயமே.

இருப்பினும்
இனி வரும் நாட்களில் முஸ்லிம் இளஞர்கள் தங்களின் கோபதாபங்களை கட்டுப்படுத்திக்கொண்டும், அரசு,நிர்வாகம், நீதித்துறை, சமுதாயத்தலைமை, பரஸ்பர ஆலோசனைகள் மூலம் தனது நிலைப்பாட்டுகளை வகுத்து கொள்வது சாலச்சிறந்தது.
எந்த ஒரு நிலையிலும் இஸ்லாமிய பண்பாடுகளை, ஒழுக்க மாண்புகளை தவற விடாமல் நாகரீகமானமுறையில், சாத்வீகமான வகையில் நடந்துகொள்வது அவசியம்.

கமலஹாஸனின் பாஷையில் "சாம , தான, பேத" முறைவரை செல்லலாம். "தண்ட" என்னும் நிலை யை தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நபிகளாரின்(ஸல்) மக்கத்து வாழ்க்கை நம்முன் இருக்க வேண்டியது அவசியம். //  

0 comments:

Post a Comment