f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:14 AM
இது அனைவருக்கும் பொருந்தும் - கடைப்பிடிக்க முயல்வோம்.

கருத்து சொல்பவர்கள்,
கருத்துக்கு எதிர்ப்பு சொல்பவர்கள் என எவராக இருந்தாலும்
மரியாதையோடு கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
எவரையும் மரியாதையின்றி பேசுவது,
அநாகரிகமான வார்த்தைகளில் அழைப்பது ,
எள்ளி நகையாடுவது ,
ஆத்திரம் கொண்டு திட்டி எழுதுவது
போன்றவை எல்லாம் நல்ல செயல் ஒன்றும் அல்லவே.!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “இறைவனிடத்தில் மனிதர்களில் மிகவும் வெறுப்புக்குரியவன் எதற்கெடுத்தாலும் கடுமையாக சண்டை பிடிப்பவனே.” (நூல்: புகாரி தமிழ் 4523)

நாம் விரும்பும் ஒரு நபரை மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக சிலர் கோபத்தில் கொப்பளிக்கிறார்கள்.

தன்னோடு இணைந்து , தன்னை, தன் தரப்பு நியாயத்தை புரிந்து கொண்டு,
தனக்கு ஆதரவாக இல்லாமல் , தனக்கு எதிர் தரப்பில் இருக்கிறாரே என மற்றொரு சாராரும் கோபத்தில் கொப்பளிக்கிரார்கள்.
இரண்டு கோபங்களுமே தவறு.!

மற்றவர்களும் நம் கருத்தை பரிசீலிக்க,
அவருக்கு மனம் வரும் வகையில்
நம் அணுகுமுறையை அமைத்துக் கொள்ள முயல்வோம்.
மேற்கொண்ட பேசுவது பயனில்லை எனும் நிலை வரும் போது உரையாடலை அத்தோடு நிறுத்திக் கொள்வதே நல்லது.

நாம் அனைவரும்,
மற்றவரின் கருத்துக்களையும் புரிந்து கொள்ள முயல்வோம்.
நாகரிகமாக பதில் சொல்ல முனைவோம்.

விருப்பு வெறுப்பு களைந்து பார்க்க முயலுங்கள் இந்த விடியோக்களை..
http://www.youtube.com/watch?v=QmJ7FVwGgd0

http://www.youtube.com/watch?v=XNPhLZ2Ubac

http://www.youtube.com/watch?v=bj-5CHB35wc

0 comments:

Post a Comment