f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:14 AM
DAM 999 won't release in Tamil Nadu, rules Supreme court.

Jan24th 2013 : DAM 999 won't release in Tamil Nadu, rules Supreme court.
//Ahmed Ansar From New Delhi:
வெட்கி தலைகுனிய வேண்டும் அல்லவா.!!
மறைக்கப்பட்ட செய்தி.

தமிழகத்தில் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அதிகரிப்பிற்கு பின்னர், வடஇந்திய செய்தி நிறுவனங்களை போல ப்ரேகிங் நியூஸ் கலாச்சராம் இதிலும் கால் பதித்தது. குறிப்பாக தங்களின் புதுடில்லி செய்தி பிரிவுகளை பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தமிழக தொடர்புடைய உச்சநீதிமன்ற செய்திகளை உடனுக்குடன் வழங்குவதை பொறுத்தவரையில் சமீப காலமாகவே தொலைகாட்சி சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

ஆனால் ஆச்சர்யமாக இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் வெளிவந்த மிக முக்கிய தீர்ப்பினை என்னவோ தமிழக தொலைகாட்சிகள் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. சர்ச்சைக்குரிய டாம் 999 திரைப்படத்தை திரையிட தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் சோஹன் ராய் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். அடடடடா! தமிழக விவசாயிகள் சங்கத்தினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அல்லவா பெருமகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி இது.

ஆனால் தற்பொழுது இருக்கும் பரபரப்பான விஸ்வரூபம் பட சர்ச்சை தொடர்பாக நடைபெற்றுவரும் போராட்டங்களை எவ்வளவுக்கெவ்வளவு மத சாயம் பூசி கழுவி ஊற்ற வேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு ஊற்றுகின்றனர். இந்தநேரத்தில் டாம் 999 திரைப்படம் தொடர்பான தீர்ப்பு செய்தியை ஒளிபரப்பினால், அதற்கு இதே இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சகர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் அல்லவா! என்னால் உறுதியாக கூற முடியும்.

தற்பொழுது இருக்கும் இதே எண்ணிக்கையிலான தொலைக்காட்சி நிறுவனங்கள், கடந்த 2011-ம் ஆண்டு டாம் 999 திரை ப்படத்திற்காக நடந்த போராட்டத்தின் சமயத்தில் இருந்திருந்தால், ஒரு செய்தி சேனல் கூட நடுநிலைத் தன்மையுடன் தமிழ் மற்றும் மலையாள ஆர்வலர்களை வைத்து கருத்து விவாதம் நடத்தியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் பாதிக்கப்படுவது தமிழனல்லவா. ஒருவேளை ஏதேனும் ஒரு சேனல் அவ்வாறு விவாதம் நடத்தியிருந்தாலும் கூட, அவ்வளவுதான் செத்திருப்பாரு அந்த சேனலின் சேகரு (ஆசிரியர்). அந்த கணமே அரசியல் கட்சிகளின் கண்டனங்களுக்கு குறிப்பிட்ட சேனல் உள்ளாகி இருக்கும். போங்ப்பா நீங்களும் உங்கள் புண்ணாக்கு நடுநிலையும்..

//ahmed ansar// from New Delhi

http://www.ndtv.com/article/south/dam-999-won-t-release-in-tamil-nadu-rules-supreme-court-321899

0 comments:

Post a Comment