f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:39 AM
அட இங்கே பாருங்க சீமானை. நன்றி சீமான் அவர்களே.

நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரப் போவதாக அறிவிக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.தமிழக அரசின் இம்முடிவை நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் வரவேற்றுள்ளார். முஸ்லிம்களை இழிவாகச் சித்தரித்திருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் பலவும் முறையிட்டதன் பேரில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் இம்முடிவை வரவேற்றுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான், பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களையும், காபரே நடனக்காரர்களாக கிறிஸ்தவர்களையும் காண்பிக்கும் போக்கு உள்நோக்கம் கொண்டதோ என்று ஐயுறச் செய்வதாகக் கூறி, அவ்வகையில் 'விஸ்வரூபம்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடை சரியானதே என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: இந்நேரம்.com

0 comments:

Post a Comment