f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:39 AM
கமலுக்கு ராமதாஸ் ஆதரவாம்!

தலித்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை அரசியலில் செய்கிறார் ராமதாஸ்
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை திரையில் செய்கிறார் கமல்

தலித்களை ரவுடிகளாகச் சித்தரிக்கிறார் ராமதாஸ்
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார் கமல்

தலித் அரசியல் இயக்கங்களை 'வன்முறைக் கும்பல்' என்கிறார் ராமதாஸ்
முஸ்லிம் அரசியல் அமைப்புகளை 'கலாச்சாரத் தீவிரவாதக் குழு' என்கிறார் கமல்

தலித்களுக்கு எதிரான பொதுப்புத்தியை பயன்படுத்தி அரசியலில் அறுவடை எடுக்கத் துடிக்கிறார் ராமதாஸ்
முஸ்லிம்களுக்கு எதிரான பொதுப்புத்தியைப் பயன்படுத்தி திரையில் அறுவடை எடுக்கத் துடிக்கிறார் கமல்

பெரியாரிய முகமூடி ஒருபுறம், சாதி ஆதிக்க மனோநிலை மறுபுறம் என இருவேடம் போடுகிறார் ராமதாஸ்
பெரியாரிய முகமூடி ஒருபுறம், ஏகாதிபத்திய ஆதரவு மனோநிலை மறுபுறம் என இருவேடம் போடுகிறார் கமல்

கமலுக்கு ஆதரவாக அரசியல் அரங்கில் வந்துள்ளது இரண்டே இரண்டு அறிக்கைகள்தான்
ஒன்று பா.ஜ.க எச்.ராஜாவின் அறிக்கை; இன்னொன்று பா.ம.க ராமதாசின் அறிக்கை!

தருமபுரி வன்முறையின்போது ராமதாசுக்கு எதிராகக் கொந்தளிக்காமல் கள்ள மெளனம் காத்த
முஸ்லிம் கூட்டமைப்பின் சில முகங்கள் ஏனோ இப்போது எனக்கு நினைவில் வந்து தொலைக்கிறது!

-ஆளூர் ஷாநவாஸ்

0 comments:

Post a Comment