“நேரில் கைகுலுக்கிவிட்டு,
முதுகில் குத்திவிட்டதாக”
இஸ்லாமியக்
கூட்டமைப்பினர் மீது
கமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
என்ன நடந்தது என்பதை
கூட்டமைப்பினர்தாம்
மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
ஆயினும்
கமலுக்கு ஒரு சொல்:
இறைநம்பிக்கையும்
இறையச்சமும் உள்ள
ஒரு முஸ்லிம்
எப்போதும் முதுகில் குத்தமாட்டான்.
உங்கள் இல்லத்தில்
விஸ்வரூபம் திரைப்படத்தைப்
பார்த்த
முஸ்லிம் பிரதிநிதிகள்
உங்களிடம்
ஒரு வார்த்தைகூட பேசாமல்-
குறைந்த பட்சம்
ஒரு நன்றிகூட சொல்லாமல்
வந்துவிட்டார்கள் என்பதை
அறிந்து வருந்தினேன்.
ஆயினும் கூட்டமைப்பினர் மீதும்
குற்றம் சொல்ல முடியாது.
ஏனெனில்
அவர்கள் பார்த்த
படக்காட்சிகள் அப்படி!
“தீவிரவாதிகளின் கையேட்டு நூல்” போல்
குர்ஆனை நீங்கள் சித்திரித்த
காட்சிகளைப் பார்த்துவிட்டு
பேசவும் பிடிக்காமல்தான்
வெளியேறி வந்தார்கள்.
ஆகவே இதில் ‘முதுகில் குத்துவது’
எங்கே வந்தது கமல் அவர்களே?
உண்மையில்
பார்க்கப்போனால்
“முஸ்லிம்களின் நண்பன்”
என்று சொல்லிக் கொண்டே
இப்படிப்பட்ட
படத்தை எடுத்த நீங்கள்தான்
முஸ்லிம் சமுதாயத்தின்
முதுகில் குத்தியிருக்கிறீர்கள்.
ஆயினும் இந்தக் காயம்
விரைவில் ஆறவேண்டும்;
நமக்கிடையிலான அன்பு
மீண்டும்
விஸ்வரூபம் எடுக்க வேண்டும்
என்பதுதான்
என் பிரார்த்தனை.
-சிராஜுல் ஹஸன்
0 comments:
Post a Comment