f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:31 AM
வினை விதைத்த விஸ்வரூபன் !

கமலஹாசனுக்கு இது புதிதல்ல.

இதுவரை, பல்வேறு சந்தர்ப்பங்களில், இது போன்ற தடைகளை, எதிர்ப்பை, சந்தித்தே வந்திருக்கிறார். ஆனால்,முந்தைய எதிர்ப்புகளை விட விஸ்வரூபம் பிரச்னை பலமடங்கு வளர்ந்து பிரமாண்டமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

தன்னம்பிக்கையின், மொத்த உருவமான, கமலையே இது பலமாக ஆட்டிப்பார்த்திருக்கிறது. இக்கட்டுரை, எழுதப்படுகிற இந்த நொடியிலும் கூட, கமலஹாசன் பிரசவ வலியோடு, தன் படத்தை வெளியிடுகிற முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம்.

அவருடைய வலியை, வேதனையை, நம்மால் நிச்சயமாக உணரமுடிகிறது. அதற்கான மரியாதையை கொடுத்துதான் ஆகவேண்டும். தன் படைப்பை, பொதுவில் வைக்க இயலாத எந்த படைப்பாளிக்கும் உருவாகக்கூடிய கடும் மனவேதனை அது. நம்மால் உணரவே இயலாது. அதுவும் இது நூறுகோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட படைப்பாயிற்றே!. ஒவ்வொரு நொடியும் வட்டி ராக்கெட் வேகத்தில் ஏறுமே சும்மாவா!

இப்படத்தினை, துவங்கும்போதே இப்படத்துக்கு இதுபோன்ற எதிர்ப்பு வரும் என்பதை கமல் அறியாதவரில்லை. அதனால்தானோ என்னவோ இஸ்லாமிய தலைவர்களை அழைத்து படத்தையும் போட்டுக்காட்டினார். ஆனால் வேலியில் போகிற ஓணானை இழுத்து வேட்டிக்குள் விட்டதுபோல, அதுவே அவருக்கு ஆபத்தாக முடியும், என கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அதுவும், எதிர்ப்பு இந்த அளவுக்கு இருக்குமென்றும் நினைத்திருக்க மாட்டார். தமிழக அரசே, இவ்விஷயத்தில் தலையிட்டு, படத்தைத் திரையிட தடைவிதிக்கும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை அடிப்படையில் அரசு சரியாக இந்த முடிவை எடுத்திருக்கிறது,என்பது,நீதிமன்றமும் படம் பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்று 28 வரையில் தள்ளி வைத்திருப்பது சுட்டிக் காட்டுகிறது.இலங்கை,மலேசியா ஆகிய வெளி நாடுகளிலும்,இப் படத் த்திற்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது குறிப்பிடத் தக்கது.

ஆகவே,இவ்விவகாரத்தில், கருத்து சுதந்திரம் போய்விட்டது... தமிழ்சினிமாவுக்கு ஆபத்து.. என்றெல்லாம், பேசுபவர்கள் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின், எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ள சூழலில் இத்திரைப்படத்தால், சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும், என அஞ்சியே முன்னேற்பாடாக 15 நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. படத்தை மொத்தமாக திரையிடவே கூடாது என தடைவிதித்துவிடவில்லை. பேச்சுவார்த்தைகள் மூலமாக பல்வேறு அமைப்புகளை சரிசெய்துவிட்டுகூட படத்தை வெளியிடலாம்.

சென்ற ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த, ஒரு முட்டாள் ‘இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ்’ என்கிற படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டான். அதற்கு, உலகம் முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், எந்த விதமான எதிர்ப்புகள் நிலவியதை, என்பதை அனைவருமே அறிவோம். சென்னை அண்ணா சாலையில், ஆயிரக்கணக்கான, இஸ்லாமிய இளைஞர்கள் கூடி, அமெரிக்க தூதரகத்தை, முற்றுகையிட்டனர். சென்னையே, இரண்டு நாட்கள், முடங்கியது. அதுபோன்ற, அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது. ஏற்கனவே கோவை,மதுரை மாதிரியான பகுதிகளில் இந்து-இஸ்லாமிய அமைப்புகளிடையே இருக்கிற பூசலுக்கும், மக்களிடையே பிரிவினையையும், வன்முறைக்கு தூபம் போடவும், வாய்ப்பாக அமையாதா? அதையெல்லாம் யோசிக்கத்தான் வேண்டும்.

கோவையில், இப்படத்துக்கு தடைவிதித்த கலெக்டர் அதைதான் வலியுறுத்தி சொல்கிறார். ஏற்கனவே இது கலவரபூமி, இதில் இதுமாதிரியான படங்கள் எங்களுக்கு மேலும் தலைவலியை உண்டாக்கிவிடக்கூடும். உங்கள் பஞ்சாயத்துகளை முடித்துவிட்டு படத்தை வெளியிடுங்கள் அதுவரைக்கும் தடைதான் என்றார். ஒருவேளை படத்தை வெளியிட்டு கலவரம் உண்டாகி பத்துபேர் படுகொலை செய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

மருத்துவர் ராமதாஸை ஏன் மதுரையிலும் தூத்துகுடியிலும் நுழைய தடைவிதித்திருக்கிறார்கள். இதே சட்ட ஒழுங்கு பிரச்சனையில்தானே.. அப்போதெல்லாம் கருத்து சுதந்திரக் காவலர்கள் அமைதியாகத்தானே இருந்தார்கள். அதுபோலவேதான் இதுவும். முக்கியமாக,ராமதாஸை எதற்காக எதிர்க்கிறோமோ, அதே காரணங்கள் கமலஹாசனிடம் இருக்கிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு, வெறும் வெற்றுக்கூச்சல் அல்ல. அந்த கூச்சலுக்கு பின்னால் இருபதாண்டு சரித்திரம் இருக்கிறது. குறிப்பாக, பாபர் மசூதி இடிப்புக்கு, பின்னர்தான் தமிழ்சினிமா, இஸ்லாமியர்களை, தீவிரவாதிகளாக மட்டுமே காட்சிப்படுத்துகிற பாணியை, கையில் எடுத்துக்கொண்டது. அதற்கு, முன்பிருந்த தமிழ்சினிமாவில், இஸ்லாமியர்கள் ஏழைகளாக, டெய்லர்களாக,கறிவெட்டுபவராக,நல்லவராக, உதவிகள் செய்பவராக மட்டுமேதான் காட்சிப்படுத்தியிருக்கிறது.

யோசித்துப்பார்த்தால், கடந்த இருபதாண்டுகளாக, ஒரு சில திரைப்படங்களைத்தவிர்த்து மற்ற எல்லா படங்களிலும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மட்டுமே தமிழ்சினிமாவில் உலவினர்.
இதற்கான, எதிர்ப்பு கடந்த பத்தாண்டுகளாக, வலுப்பெற்றது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு முறையும், இதுபோல, காட்சிப்படுத்தும் போதும் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தே வந்துள்ளனர். ஆனால், அதெல்லாம் சிறிய போராட்டம், சாலைமறியல் என்கிற அளவில் முடிந்துவிடும். அதுபோன்ற எதிர்ப்புகளை ஒருநாளும் மதித்து தன்னை மாற்றிக்கொள்ள தமிழ்சினிமா தயாராக இருந்ததேயில்லை. இதோ துப்பாக்கி வரைக்கும் கூட அது தொடர்ந்தது.

தமிழ்சினிமாவின் காமெடிவெறிக்கு திருநங்கைகளும் இதுவரை, பல்வேறு சந்தர்ப்பங்களில், இது போன்ற தடைகளை, எதிர்ப்பை, சந்தித்தே வந்திருக்கிறார். ஆனால்,முந்தைய எதிர்ப்புகளை விட விஸ்வரூபம் பிரச்னை பலமடங்கு வளர்ந்து பிரமாண்டமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

நன்றி - cinemobita.com/cinenews

0 comments:

Post a Comment