f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:32 AM
விஸ்வரூபம் எதிர்க்கப்படுவதுக் குறித்து சிலர் இப்படி கேட்கின்றனர் இதற்க்கு முன்னர் விஜயகாந்த் ,அர்ஜுன் ,கமல் போன்றோர் நடித்த படங்களில் முஸ்லிம்கள் தீவிரவாதியாக காட்டப்பட்டனரே. அப்போது எதிர்க்காத நீங்கள் இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள் .எதிர்க்காமல் விட்டதன் விளைவுதான் உச்சக்கட்டமாக இவ்வளவு இழிவாக முஸ்லிம்களை சித்தரித்து படம் எடுக்கப்பட்டுருக்கிறது .
சமீப காலத்தில்தான் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற கொடுமைகள் எதிர்த்து போராட்டம் நடக்கிறது .
தாழ்த்தப்பட்டவர்கள் இழிவுப்படுத்தப் படுவது எதிர்த்துப் போராட்டம் நடத்தப் படுகிறது .அதற்கென்று அவர்கள் இவ்வளவு நாள் ஏன் பேசாமல் இருந்தனர் என கேட்க முடியுமா ?.

அவர்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும் .

ஏன் ஒரு சமுதாயத்தின் விழிப்புணர்வை மான உணர்வை காழ்ப்புணர்வோடு எடுத்துக் கொள்ள வேண்டும் .

ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது படத்தை எடுத்த நபருக்கு உள்ள சுதந்திரமாம் .

இழிவுப்படுத்தப் படும் சமூகம் எதிர்த்துக் குரல் கொடுப்பதுக் கூட பயங்கரவாதமாம் .
என்ன நாகரீகம் .அடுத்த சமூகத்தை இழிவுப்படுத்துவது .அவதூறாக சித்தரிப்பது சுதந்திரம் என்னும் பெயரில் அழைக்கப்படுவது . முஸ்லிம்களின் மீதான தாக்குதல் அல்ல . மனித நாகரீகம் , சுதந்திரம் மீதான தாக்குதலாகும். - Mohamed Abuthahir

0 comments:

Post a Comment