f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:35 AM
தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது. இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர். இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment