f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:00 AM


ஒரு பெரிய பிரச்சினையை , அது உருவாகும் முன்பே இஸ்லாமிய அமைப்புகள் தடுத்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனால் அச்சம் அடைந்தது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. நல்லிணக்கம் , அமைதியை விரும்பும் நடு நிலையாளர்களும் அச்சம் அடைந்து இருந்தனர்.

இந்த நிலையில் அந்த படம் இஸ்லாமிய தலைவர்களுக்கு போட்டுக்காட்டப்பட்டது. படம் பார்த்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ப்டம் பார்த்தவர்களில் ஒருவரான ஜவாஹிருல்லா MLA கூறுகையில் இந்த படம் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக கூறினார்.

இஸ்லாமியர்கள் தம் உயிர் என போற்றும் குர் ஆன் , பயங்கரவாதிகளின் கையேடாக சித்திரிக்கப்பட்டுள்ளது
சர்வதேச பயங்கரவாதி முல்லா உமர் , தமிழ் நாட்டில் ஓர் ஆண்டுகள் தங்கி இருந்ததாக காட்டப்பட்டுள்ளது.
12 வயதேயான இஸ்லாமிய சிறுவன் ஆயுத அறிவு பெற்றுள்ளதாக காட்டப்பட்டு, சின்ன வயதில் இருந்தே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக காட்டப்படுகிறது.
மாமன் , மச்சான் என உரிமையுடன் பேசி நல்லிணக்கத்துடன் வாழும் நம் மண்ணில் இது போன்ற படங்கள் , அமைதியை கெடுத்து விடும்.
முழுக்க முழுக்க பிரச்சார நோக்கத்துடன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வரலாற்ற்றில் இப்படி ஒரு பிரச்சாரப்படம் வ்ந்தது இல்லை

இவ்வாறு அவர் பிபிசிக்கு பேட்டி அளித்தார்.

இந்த நிலையில்தான் , நடு நிலையாளர்கள் அச்சம் அடைந்தனர். தேவையில்லாமல் பிரச்சினை பெரிதாகி விடுமோ என்ற பீதி ஏற்பட்டது. போராட்டங்கள் , ஊர்வலங்கள் போன்றவற்றால் , அமைதி கெடுவதுடன் , படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுமே என நினைத்தனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் மிகவும் கட்டுப்பாடுடனும் , கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக ஏதும் பேசவில்லை..யாராவது தவறாக பேசினால் , மற்றவர்களுக்கு முன்பு நாங்களே கண்டிப்போம் என கடுமையாக எச்சரித்தனர்.

உயிரைக்கொடுத்தாவது படத்தை தடுப்போம் என அறிவித்த இஸ்லாமிய தலைவர்கள் , வன்முறையை நாடாமல் சட்டத்தை மதித்து செயல்பட்டதில்தான் , தம் முத்திரையை பதித்து விட்டார்கள்.

ஜன நாயக் முறைப்படி எதிர்ப்பை தெரிவித்த கையோடு , கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இதன் விளைவாக படத்துக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே , அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.

ஜாதி பலம் , பண பலம் , ஆள் பலம் , சினிமா கவர்ச்சி என அனைத்தையும் மீறி அவர்கள் பெற்றி பெற்றாலும் , அவர்கள் கமலுக்காக பிரார்த்தனை செய்யவே விரும்புகிறார்கள்..

தவறான எண்ணங்களில் இருந்து கமல் விடுபட்டு ஆக்கப்பூர்வமான வழியில் செயலாற்ற பிரார்த்திக்கின்றோம் என்பதே அவர்களின் செய்தி.

0 comments:

Post a Comment