f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:01 AM
தொலைக்காட்சிகளில் வெறும் பத்து வினாடிகள் ஓடும் விளம்பரத்திற்கு ஏன் நிறுவனங்கள் பல லட்சங்களை கொட்டிக் கொடுக்க முன் வருகிறது.?

எந்த ஒரு பொருளையும் நாம் வாங்க முற்படும் போது, நமக்கு திரும்ப திரும்ப காட்டப்பட்ட விளம்பரங்களே,
நாம் வாங்க இருக்கும் பொருளை பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

காரணம் என்னவென்றால் , கருத்து உருவாக்கம் பெரும் மாற்றங்களையும் , அனுமானங்களையும் ஏற்படுத்தும்.

இன்று நாட்டு மக்களில், அறிவு ஜீவிகள் என தன்னை நம்பிக் கொண்டு இருக்கும் பெரும்பாலானவர்களின் பெரும்பாலான அபிப்ராயங்கள் ஊடக கருத்துருவாக்கத்தின் காரணமாக அமைந்தவையே.

உண்மை அவற்றிற்கு நேர் எதிராக இருந்தாலும்,
சிரத்தை எடுத்து,
ஊடக பிரதிபலிப்புகளைத் தாண்டி,
உண்மை நிலையை ஆராய்ந்து அறிந்து கொண்ட ஆய்வாளர்கள் வெகு சிலரே.

மற்றவர்கள் தனக்கு போதிக்கப்பட்ட விசயங்களின் அடிப்படையில்,
எல்லாம் தங்களுக்கு தெரியும் என்பதாகவும், தங்களையும் பெரும் அறிவுஜீவி என்பதாகவும் இன்னும் நம்புகிறார்கள்.

0 comments:

Post a Comment