f
  • முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது

    விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நிறைவடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை நேற்றே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கமல்ஹாசன் நேற்று மும்பையில் இருந்ததால் பேச்சுவார்த்தை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கமல் மும்பையிலிருந்து சென்னை திரும்பியதையடுத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Saturday, January 26, 2013

Posted by NewsAndVoice
No comments | 11:23 AM
Nisha Mansur
சென்சாரே அனுமதித்துவிட்ட பிறகு என்ன பிரச்சினை...???

#அரசே மதுக்கடைகளை நடத்திவருவதால் நாம் அனைவரும் நாளைமுதல் காலை பானமாக காஃபிக்கு பதில் மதுவை அருந்துவோம்...!!

படத்தை பார்க்க வேண்டும் என்றால் பாருங்கள்.. மது குடிக்க வேண்டும் என்றால் குடியுங்கள்.. இரண்டும் கட்டாயமில்லை!!

எனது பதில்:
நான் மதுவருந்துவதில்லை,ஆனால் மதுவருந்துவதை எதிர்க்கிறேன்...ஏனென்றால் மதுவருந்திவிட்டு தாறுமாறாக வாகனங்களை இயக்கும் குடிகாரர்களால் ஏற்பட்ட எண்ணற்ற விபத்துகளையும் உயிரிழப்புகளையும் நாடு அறியும்.
இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் என் சொந்த அனுபவமாக கடந்த 2.1.2011 அன்று குடிபோதையில் தாறுமாறாக வாகனத்தை இயக்கிய ஒரு குடிவெறியனால் என் தம்பி வந்த கார் மோசமாக மோதப்பட்டு கிட்டத்தட்ட 12 சர்ஜரிகள் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு;
பற்பல லட்சங்கள் செலவுக்குப்பிறகு;
கடும் வலி/மன உளைச்சல்கள்/வேதனைகளுக்குப் பிறகு இப்போதுதான் நடமாட ஆரம்பித்திருக்கிறார்.

எவனோ குடித்துவிட்டுப் போகட்டும் என்று யாரும் சும்மா இருக்கமுடியாது ...ஏனென்றால் பாதிப்புக்குள்ளாவது சமூகம்தான்.

அதேபோல் எவனோ எப்படியோ படமெடுத்துவிட்டுப் போகட்டும் நீ பார்க்காதே என்று சொல்லமுடியாது....ஏனென்றால் சமூகத்தின் ஆழ்மனதில் விஷவிதைகள் விதைக்கப் படுவதால் பாதிப்புக்குள்ளாவது இதே சமூகம்

0 comments:

Post a Comment